சென்னை, நவ 17 தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 65 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே கரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வரும் நிலையில், நேற்றைய பாதிப்பு 65 ஆக குறைந்துள்ளது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்ப தாவது:- தமிழ்நாட்டில் புதிதாக 34 ஆண்கள், 31 பெண்கள் உள்பட மொத்தம் 65 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய் யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னை யில் மட்டும் 11 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கரோனா தொற்றிலிருந்து 97 பேர் குண மடைந்து உள்ளனர். கரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்பட வில்லை. தற்போது கரோனா பாதிப்புக் குள்ளாகி 605 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில்...
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 635 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின் படி, "இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 635- பேருக்கு கரோனா உறுதி செய்யப் பட்டுள்ளது. நாட்டில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 67 ஆயிரத்து 311 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 7,175 ஆக உள்ளது. கரோனா பாதிப்புக்கு மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 546- ஆக உயர்ந்துள்ளது. கரோனாவில் இருந்து குணம் அடைந்தோர் விகிதம் 98.79 சதவிகிதமாக உள்ளது. கரோனாவில் இருந்து 386- பேர் குணம் அடைந்துள்ளனர். கரோனா பாதிப்புக்கு நாட்டில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 219.83 கோடி டோஸ்கள் ஆகும்.
No comments:
Post a Comment