இந்த வார 'துக்ளக்'கில் (23.11.2022 பக்கம் 3) தலையங்கம் பகுதியில் குருமூர்த்தி அய்யர் எழுதிய அண்டப்புளுகைக் கேளுங்கள்! கேளுங்கள்!
"யாருக்குப் புது ஒதுக்கீடு? பொருளாதாரத்தில் பலவீனமானவர்கள் எந்த ஜாதியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அது தவிர, இஸ்லாமிய, கிறிஸ்தவ, சமண, பவுத்த, சீக்கிய யூத, ஆங்கிலோ இந்திய ஆகிய சமயங்களைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் புது ஒதுக்கீட்டில் பங்கு உண்டு" என்று எழுதியிருக்கிறார்.
பொருளாதாரத்தில் பலவீனமானவர்கள் எந்த ஜாதியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் புதிய இடஒதுக்கீட்டில் பங்கு உண்டாம்! இது உண்மையா? சமூக நீதி கோருபவர்களைப் பித்தலாட்டக் கும்பல் என்று எழுதும் குருமூர்த்திதான் புதிய சட்டத்தில் பொருளாதாரத்தில் பலவீனவர்களாக எந்த ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இடஒதுக்கீடு உண்டு என்று கைக் கூசாமல் எழுதுகிறா(ர்).
இவர்களை என்ன பெயர் சொல்லி அழைக்கலாம்?
பித்தலாட்டத்தின் அப்பன் என்று கூறலாமா?
No comments:
Post a Comment