எப்பொழுது போராட்டம்?
* பால் விலையைக் குறைக்க பா.ஜ.க. போராடும்.
- பி.ஜே.பி. அண்ணாமலை
>> கேஸ் சிலிண்டர் விலையைக் குறைக்க எப் பொழுது போராட்டம்?
ஜாக்கிரதை!
* காசி தமிழ்ச் சங்கமம்: நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர்.
>> எது எப்படி இருந்தாலும், கங்கையில் மட்டும் குளிக்கவேண்டாம். தொழிற்சாலைகளின் சாக்கடை சங்கமம் கங்கையில் அதிகம்!
திருவிளையாடல்!
* குஜராத் சட்டமன்ற தேர்தல் - ஆம் ஆத்மி வேட்பாளர் திடீர் விலகல்.
>> ஆரம்பமாகிவிட்டது, பி.ஜே.பி.யின் ‘திருவிளை யாடல்!'
யாருக்கு சக்தி?
* ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற இங்கிலாந்து பிரதமருக்கு, பிரதமர் மோடி குஜராத்தில் பெண் தெய்வக் கோவில்களுக்குக் காணிக்கையாக வழங் கப்படும் கைத்தறி ஆடையை பரிசாக அளித்தார்.
>> இங்கிலாந்து பிரதமருக்கு ஏற்கெனவே ‘ஹிந்து' முத்திரை குத்திவிட்டார்களே!
அய்யோ, அப்பா!!
* சபரிமலைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை
>> ஏன், அய்யப்பன் காப்பாற்ற மாட்டானோ?
வேகம்! அதிவேகம்!!
* 10 சதவிகித இட ஒதுக்கீட்டால் பலன் - பாராட்டு விழா நடத்திட பி.ஜே.பி. திட்டம்.
>> வேக வேகமாக செய்யுங்கள்; அப்பொழுதுதான் வேக வேகமாக வீழ்ச்சி ஏற்படும்.
No comments:
Post a Comment