திருவனந்தப்புரம், நவ 10 ஆளுநரை பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து நீக்கும் சட்ட மசோதாவுக்கு கேரள அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. கேரள ஆளுநர் ஆரிப் முகம்மது கானை பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். ஆளுநர் அதிகாரத்தை குறைக்க வேண்டும். ஆளுநருக்கு பதிலாக நிபுணரை பல்கலைக்கழக வேந்தராக நியமிக்க வேண்டும். இவ்வாறு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசு முடிவு செய்துள்ள நிலையில், மாநில பல் கலைக் கழகங்களின் வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்கும் அவசர சட்டத்திற்கு கேரள அமைச் சரவை ஒப்புதல் அளித்துள்ளது. துணை வேந்தர்கள் நியமனங்கள் தொடர்பாக கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் மாநில அரசுக்கும் சமீப காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது என்பது குறிப் பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment