* வாழ்க வாழ்க வாழ்கவே
தந்தை பெரியார் வாழ்கவே!
* வாழ்க வாழ்க வாழ்கவே
அன்னை மணியம்மையார் வாழ்கவே!
* காப்போம் காப்போம்
மாநில உரிமைகளைக் காப்போம்
* தேவை தேவை
மாநில சுயாட்சி தேவை
* ஆளுநரே! ஆளுநரே!
கேட்கவில்லையா கேட்கவில்லையா?
ஆன்லைன் ரம்மிகள் உயிரைப் பறித்த
குடும்பங்களின் அவலக் குரல்
கேட்கவில்லையா, கேட்கவில்லையா?
* இன்னும் எத்தனை உயிர்கள் வேண்டும்?
ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டத்தில்
ஆளுநர் ஒப்புதல் கையெழுத்திட
இன்னும் எத்தனை உயிர்கள் வேண்டும்?
* ஒன்றிய அரசே! ஒன்றிய அரசே!
திரும்பப் பெறு! திரும்பப் பெறு!
அதிகார வரம்பை மீறுகின்ற
ஆளுநர் ரவியைத் திரும்பப் பெறு!
அரசமைப்புச் சட்டத்தை மதிக்காத
ஆளுநர் ரவியைத் திரும்பப் பெறு!
* ஆளுநர் மாளிகையா
ஆர்.எஸ்.எஸ். கூடாரமா?
* மதச் சார்பின்மையைக் குலைப்பதா
மதவாதத்தைத் திணிப்பதா?
* பதவி நீக்கு! பதவி நீக்கு!
ஜனநாயகத்தை மதிக்காத
சனாதனவாதி ஆர்.என். ரவியைப்
பதவி நீக்கு! பதவி நீக்கு!
* பொறுக்க மாட்டோம்!
பொறுக்க மாட்டோம்!
மக்களாட்சியை மதிக்காத
அதிகாரத் திமிரைப்
பொறுக்க மாட்டோம்
* முடக்காதே! முடக்காதே!
சட்டமன்றங்கள் நிறைவேற்றிய
சட்ட மசோதாக்களை முடக்காதே!
* தேவையில்லை தேவையில்லை
மக்களாட்சி நாட்டிலே
ஆளுநர் பதவி தேவையில்லை!
* ஆளுநரின் அதிகாரத் திமிரால்
எத்தனை உயிர்களை இழப்பது?
நீட் தேர்வால் எத்தனைஉயிர்கள்
ஆன்லைன் ரம்மியால் எத்தனைஉயிர்கள்
* மடிந்த உயிர்கள் அனைத்துக்கும்
ஆளுநர் ஆர்.என். ரவியே பொறுப்பு!
* வெளியேறு! வெளியேறு!
தமிழ்நாட்டு உணர்வை மதிக்காத
ஆளுநரே வெளியேறு!
- திராவிடர் கழகம்
No comments:
Post a Comment