காந்திநகர், நவ. 18 குஜராத்தில் மோர்பி தொங்கு பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தின் விசா ரணையில், குஜராத் நீதிமன்றம் சில முக்கிய கருத்துகளை தெ ரிவித்து உள்ள து. 150 ஆண்டுகள் பழைமை யான பா லத்தின் பராமரிப்பு பணிகளுக்கு அந்த நிறுவனம் தேர்வு செய்யப் பட்ட து எப்படி என்றும் கே ள்வி எழுப்பி உள்ளனர்.
இது குறித்து குஜராத் உயர்நீதிமன்றம் கூறு கையில், “அரசு அமைப்பான மோர்பி முனிசிபாலிட்டி இந்த விஷயத்தில் தவறிவிட்டது. இதனால் 135 பேர் பலியாகி உள்ளனர். தாக்கீது அனுப்பியும் கூட விசாரணைக்கு நகராட்சி அதிகாரிகள் யாரும் வரவில்லை. அவர்கள் புத்திசாலித்தனமாக இதில் இருந்து தப்பிக்க முயல் கிறார்களா? பாலம் மீண்டும் திறக்கப்படும் - அதன் தரத்தைச் சரிபார்க்கவேண்டும் என்று ஒப்பந்தத்தில் எதாவது இருக்கிறதா? இதற்கு யார் பொறுப்பு என்ற விவகாரங்களை அதிகாரிகள் சமர்ப்பிக்க வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட மாநக ராட்சி அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் ஏன் எடுக்கப்படவில்லை என் பதையும் அரசு விளக்க வேண்டும். ஒப்பந்தக் கோரல் விடாமலேயே குறிப்பிட்ட நிறுவனத்திற்கு அவர்கள் பணிகளை ஒதுக்கியதாகவே தெரிகிறது - என்று சரமாரி கேள் விகளை குஜராத் உயர்நீதிமன்றம் எழுப்பியுள்ளது.
No comments:
Post a Comment