தோழர் கோரா மறைந்தாரே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 7, 2022

தோழர் கோரா மறைந்தாரே!

ஒன்றிய அரசின் பத்தி ரிகைத் தகவல் அலுவலகத் தில் மொழி பெயர்ப்பாளராகப் பணியாற்றியவரும், தமிழ், தெலுங்கு, ஆங்கில மொழி வல்லுநரும், தீவிர கழகப் பற்றாளருமான தோழர் கோரா என்ற கோவிந்தராசு (வயது 71)  அவர்கள்  இன்று மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

"உண்மை", "விடுதலை", ஏடுகளில் தொடர்ந்து எழுதி வந்தவர். சிறிது காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று (7.11.2022) காலை மறைவுற்றார்.

அவர் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், கழகத்தினருக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
7.11.2022

குறிப்பு: இன்று மாலை 4 மணிக்கு ஆவடி - பெரியார் நகர் எரி தகன மேடையில் இறுதி நிகழ்வு நடைபெறும். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் நிகழ்வில் பங்கேற்று கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை செலுத்துகிறார்.

  

No comments:

Post a Comment