புதுடில்லி,நவ.7- பன்னாட்ட ளவில் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர் கள், பத்திரிகையா ளர்கள் என முக்கிய நபர்களின் தகவல்களை திருடுவதற்கு இந் திய ஹேக்கர்கள் பயன்படுத்தப் படுவதாக பிரிட்டன் பத்திரிகை யான ‘தி சண்டே டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
கணினி, செல்பேசிகளை ஹேக் செய்வதற்கென்று இந்தி யாவில் கும்பல் உள்ளது என்றும். இந்தக் ஹேக் கர்களைப் பயன்படுத்தி உலக அளவில் அரசுகளும், தனியார் நிறுவ னங்களும் சட்டவிரோதமாக தகவல்களை உளவு பார்ப்பதாக வும் அதற்காக ஆயிரக் கணக்கான டாலர்கள் வழங்குவதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
‘தி சண்டே டைம்ஸ்’ மற்றும் ‘புலனாய்வு இதழியல் அமைப்பு’ இணைந்து இந்தியாவில் ஹேக்கர்கள் பற்றி புலனாய்வு மேற்கொண்டது. அதன் அடிப் படையிலேயே இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன. அவ் விரு நிறுவனங்கள் இந்தியாவில் சட்டவிரோத ஹேக்கிங் உலகம் எப்படி இருக்கிறது என்பதைக் கண்டறிய பத்திரிக்கையாளர் குழுவை உருவாக் கியது. அந்தக் குழுவினர் ஒரு போலி யான புலனாய்வு நிறுவனத்தைத் தொடங்கி, தங்களை லண்ட னின் ரகசிய புலனாய்வு அமைப் பின் (MI6) மேனாள் உறுப்பி னர்கள் என்றும் தற்போது கார்ப்பரேட் நிறுவனங் களுக் காக துப்பறியும் பணிகள் செய் வதாகவும் அடையாளப்படுத்திக் கொண்டு, தங்கள் நிறுவனத் துக்காக வேலை செய்ய ஹேக்கர்கள் தேவைப்படுகி றார்கள் என்று விளம்பரப் படுத் தினர். அந்த வேலைக்கு இந்தி யாவிலிருந்து பல ஹேக்கர்கள் விண்ணப்பம் அனுப்பினர்.
அந்த பத்திரிகையாளர் குழு இந்தியாவுக்கு வந்து, ஹேக்கர் களை நேர்காணலுக்கு அழைத் தது. ஹேக்கர் களுடனான உரை யாடலை பத்திரிகை யாளர் குழு ரகசியமாக பதிவு செய்தது.
பெங்களூரைச் சேர்ந்த உட்கர்ஷ் பார்கவா என்ற ஹேக் கர், தான் இந்திய அரசாங்கத் துக்காக ஹேக்கிங் வேலை செய்வதாகவும், துருக்கி, பாகிஸ் தான், எகிப்து, கம்போடியா, கனடா ஆகிய நாடுகளின் அமைச்சகங்களின் கணி னிக்குள் நுழைந்து விவரங்களை திருடுவதற்காக இந்திய அரசு தன்னை நியமித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அதேபோல், 31 வயதான ஆதித்யா ஜெயின் ஹேக்கிங் வேலைக்காக குருகிராமில் அலுவலகம் வைத்துள் ளார். உலகில் எவருடைய மின்னஞ்சலுக்குள்ளேயும் தன்னால் ஊடுருவி விட முடியும் என்று ஆதித்யா ஜெயின் தெரிவித்துள்ளார்.
அவரது இலக்குப் பட்டிய லில் இந்திய தொழிலதிபர் அசோக் இந் துஜா, பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப், பாகிஸ்தானின் முன் னாள் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை அமைச் சர் பவாத் சவுத்ரி, லிஸ் டிரஸ் பிரிட்டன் பிரதமராக இருந்த போது அவரது முதன்மை அலுவலராக இருந்த மார்க் புல்புரூக், பிபிசி செய்தி நிறுவன அரசியல் பிரிவு ஆசிரியர் கிறிஸ் மாசன் உட்பட முக்கிய நபர் களின் பெயர்கள் இடம்பெற்றுள் ளன. இந்த ஹேக்கர்கள் தாங்கள் ஹேக் செய்ய போகும் நபருடன் சமூக வலைதளங்கள் மூலமாக நட்பை உருவாக்குவார்கள். அதன் பிறகு அந்த நபருக்கு வைரஸ் உள்ளடங்கிய இணைப்பை அனுப்புவார்கள். என்றும் தெரிவிக்கப்படுள்ளது.
No comments:
Post a Comment