தூத்துக்குடி-மைசூரு இடையே சிறப்பு கட்டண ரயில் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 1, 2022

தூத்துக்குடி-மைசூரு இடையே சிறப்பு கட்டண ரயில்

சென்னை, நவ.1 தூத்துக்குடி-மைசூரு இடையே சிறப்பு கட்டண ரயில் 3 நாள்கள் இயக்கப்படுகிறது.   இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- மைசூரு- தூத்துக்குடி இடையே ஒரு சிறப்பு கட்டண ரயிலை இயக்க தென்மேற்கு ரயில்வே ஏற்பாடு செய்து உள்ளது. அதன்படி மைசூர் - தூத்துக்குடி சிறப்பு கட்டண ரயில் வருகிற 4, 11 18 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் மைசூரில் இருந்து மதியம் 12.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5 மணிக்கு தூத்துக்குடிக்கு வந்து சேரும். மறுமார்க்கத்தில் தூத்துக்குடி - மைசூர் சிறப்பு கட்டண ரயில் (06254) நவம்பர் 5, 12, 19 ஆகிய சனிக்கிழமைகளில் மாலை 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு மைசூர் சென்று சேரும். இந்த ரயில்கள் யெலியூர், மாண்டியா, பெங்களூர், பெங்களூர் கண்டோன்மென்ட், ஒசூர், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 மாற்று திறனாளி களுக்கான சிறப்புப் பெட்டிகள் இணைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது


No comments:

Post a Comment