பிரச்சினைகளுக்கு தீர்வு நம்மிடமே...
‘நமது வாழ்க்கையில் நடக்கும் பெரும்பாலான பிரச்சினைகளுக்குத் தீர்வு நம்மிடமே இருக்கிறது. நிதானமாக யோசித்து அணுகினால் எல்லாவற்றையும் சுமூகமாக மாற்ற முடியும்’
ஒரு வீட்டில் புதிதாக குழந்தை பிறப்பது, அந்தக் குடும்பத்தின் உறுப்பினர்கள் மற்றும் உறவுகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அதே சமயம் பிரசவித்த தாய்க்கு குழந்தை பிறப்பு உற்சாகம், மகிழ்ச்சி, பயம், பதற்றம், குழப்பம், அழுகை, எரிச்சல் போன்ற பலவித மனநிலை மாற்றங்களை உண்டாக்கும். இத்தகைய நிலை பிரசவித்த முதல் இரண்டு அல்லது மூன்று நாளில் ஆரம்பித்து சில வாரங்கள் வரை நீடிக்கும். சிலர் இதனால் தீவிரமாக பாதிக்கப்படுவதும் உண்டு. . காரணம் இல்லாமல் சோகமாகவும், கோபமாகவும், வெறுமையாகவும், எரிச்சலாகவும் இருக்கும் இதனால் குடும்பத்திலும் பிரச்சினை உருவாகும் இது குழந்தை வளர்ந்த பிறகும் நீடிக்கும்.
இதன் காரணமாக வீட்டிலும், பணியிடத்திலும் குழந்தை, கணவர், வேலை, நமது ஆரோக்கியம் என எதையும் கவனிக்க முடியவில்லை. 'பணியிடத்தில் இருக்கும்போது குழந்தையைப் பற்றியும், வீட்டில் அலுவலக வேலைகளைப் பற்றியும்' நினைவும் இருக்கும்.
இந்த நிலை குற்ற உணர்வை உண்டாக்கும். மேலும் உடல் பெருத்தல் அல்லது மெலிதல் போன்ற காரணத்தால்பெண்கள் தஙகளைத் தாழ்த்திக் கொள் வார்கள்.அவர்களால் எதையுமே சரியாக செய்ய முடியாது' என்ற எண்ணத்தை உருவாக்கிக் கொள் வார்கள். பிறகு 'இந்த நிலையில் இருந்து மீண்டு வருவ தற்கான வழிகள் வீட்டிலேயே பிடித்தமான வேலை களில் ஈடுபடுபவது, தொலைக்காட்சி போன்றவைகளே கதி என்று இருக்காமல் மனம் விட்டு பேசுவது, நண் பர்கள் மற்றும் உறவினர்களோடு பேசுவது அவர்களது வீடுகளுக்குச் சென்று வருவது மற்றும் காலார நடப்பது ஓய்வு நாட்களில் அருகில் உள்ள சுற்றுலாத்தளம் அல்லது கடற்கரை பூங்கா போன்ற இடங்களுக்குச் செல்வது போன்றவை பெண்களை இயல்பு நிலைக்கு திரும்ப வைக்கும்.
உணவு முறையை மாற்றி அமைத்து உடல் எடையைக் கணிசமாக குறைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும். நம்முடைய தாழ்வு மனப் பான்மையை போக்க நல்ல முற்போக்கான கதைப் புத்தங்களைப் படிக்க வேண்டும்.
முக்கியமாக பேச்சுவார்த்தை அரசுகளிடம் மட்டு மல்ல, குடும்பங்களிலும் இணக்கமான நடைமுறைக்கு அவசியமாகிறது.
பெரும்பாலான பிரச்சினைகளுக்குத் தீர்வு நம் மிடமே இருக்கிறது. அமைதியாக சிந்தித்து அவற்றை அணுகினால் எல்லாவற்றையும் சுமூகமாக மாற்ற முடியும்'
ஒரு குழந்தை, தனது வாழ்க்கையில் பெரும்பாலான விஷயங்களை தாயிடம் இருந்தே கற்றுக்கொள்கிறது. 'வீட்டில் தனது அம்மா எவ்வாறு மகிழ்ச்சியாக இருக்கிறார், ஒவ்வொரு சூழ்நிலையையும் எவ்வாறு எதிர்கொள்கிறார்?' என்பதை பார்க்கும் குழந்தைகள், தாங்களும் அவ்வாறே நடந்துகொள்வார்கள். எனவே குழந்தைகள் மகிழ்ச்சியாகவும், திறமையாகவும் வளர வேண்டும் என்றால், முதலில் அம்மா அவ்வாறு தங் களை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும். இன்றைய அம்மாக்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகள் என்ன? உடல் ஆரோக்கியம், கணவருடன் சுமுக உறவை வளர்ப்பது, குழந்தை வளர்ப்பு, பணியிடத் தையும், வீட்டையும் சமநிலையில் வைத்தல், கணவ ரின் குடும்பத்தினருடன் சீரான உறவை மேம்படுத்துதல் போன்றவற்றில் பல பிரச்சினைகளை இன்றைய தாய்மார்கள் சந்திக்கிறார்கள். இவற்றுக்கு ஒரே தீர்வு அவர்களின் நம்பிக்கை தான். தங்கள் மேல் சுய மரியாதையும், சுய அன்பும் காட்டினாலே இந்த பிரச் சினைகளை எளிதாக தீர்த்து விடலாம்.
No comments:
Post a Comment