நல வாரியத்தில் அலுவல் சாரா உறுப்பினர் பணியிடங்கள் ஆதரவற்ற மகளிர் விண்ணப்பிக்கலாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 15, 2022

நல வாரியத்தில் அலுவல் சாரா உறுப்பினர் பணியிடங்கள் ஆதரவற்ற மகளிர் விண்ணப்பிக்கலாம்

சென்னை, நவ. 15 நல வாரியத்தில் அலுவல் சாரா உறுப்பினர் பணியிடங்களுக்கு ஆதரவற்ற மகளிர் விண்ணப்பிக்க லாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.  தமிழ் நாட்டில் உள்ள கைம் பெண்கள் (விதவை), கண வரால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண் கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் உள்ளிட் டோர் எதிர் கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை களைந்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம் படுத்தும் வசதிகளான கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு, சிறப்பு சுய உத விக்குழுக்கள் அமைப்பது, தொழிற் பயிற்சிகள் வழங் குதல் போன்ற தேவையான திட்டங்களை வகுத்து சமூகத்தில் அவர்கள் பாது காப்புடன் கன்னியமான முறையில் வாழ்வதற்காக கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் ஒன்று உருவாக் கப்பட்டுள்ளது. 

இதற்காக கைம் பெண்கள் பிரதிநிதிகள்- 

4 நபர்கள், பெண் கல்வியாளர்கள்-2 நபர்கள், பெண் தொழில் முனை வோர்கள்-2 நபர்கள், பெண் விருதாளர்கள்-2 நபர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவன பெண் பிரதிநிதிகள்-4 நபர்கள் ஆகியோர்களை அலுவல் சாரா உறுப்பினர்களை நியமிக்கப்படவுள்ளது. எனவே தகுதிவாய்ந்த நபர்கள் உரிய விண்ணப் பத்தினை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் செயல்படும் சமூக நல அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொண்டு, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து வருகிற 18-ஆம் தேதிக்குள் அந்த அலுவலகத்தில் நேரில் சமர்பிக்க வேண்டும்.  மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலு வலகத்தை 04328-296209 என்ற தொலை பேசி எண் ணில் தொடர்பு கொள்ள லாம் என ஆட்சியர் சிறீ வெங்கடபிரியா வெளி யிட்டுள்ள ஒரு செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment