மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு - சிறப்பு முகாம்கள் : அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 27, 2022

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு - சிறப்பு முகாம்கள் : அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தகவல்

சென்னை,நவ.27-தமிழ்நாடு முழுவதும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க 28.11.2022 முதல் டிச. 31ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று தமிழ்நாடு மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 2.30 கோடி வீட்டு மின் இணைப் புகளும், 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளும் உள்ளன. இந்நிலையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தமிழ்நாடு மின் வாரியம் தெரிவித்து, அதற்கானப் பணிகளைத் தொடங்கி யுள்ளது.

இதன்படி, மின் நுகர்வோர் பதிவு செய்துள்ள அலைபேசி எண்ணுக்கு, ஆதார் எண்ணை இணைக்கு மாறு மின்வாரியம் குறுஞ்செய்தியை அனுப்பி வரு கிறது.

மின் நுகர்வோர் தங்களது பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு வைத்திருந்தாலும், ஒரே ஆதார் எண்ணை இணைக்கலாம் எனவும் மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 இது தொடர்பாக மின் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி நேற்று (26.11.2022) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 

வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புதாரர்கள், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர்.

மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழ் நாட்டில் உள்ள 2,811 மின் வாரிய பிரிவு அலுவலகங் களில் நாளை (நவ. 28) முதல் டிச. 31-ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. பண்டிகை நாட்களைத் தவிர்த்து, ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாட்களிலும் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை சிறப்பு முகாம்கள் செயல்படும்.

பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், டிச. 31ஆம் தேதி வரை ஏற்கெனவே உள்ள நடைமுறைப்படி மின் கட்டணம் செலுத்தலாம்.

மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதால், வீடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரத்தில் எவ்வித மாற்றமும் இருக்காது.

அதேபோல, கைத்தறி, விசைத்தறி மின் நுகர் வோருக்கு வழங்கப்பட்டு வரும் மானியம் மற்றும் குடிசை, விவசாய மின் இணைப்புகளுக்கு வழங்கப் பட்டு வரும் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்.

-இவ்வாறு அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment