சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை நிறுத்தி வைப்பு ஒன்றிய அரசுக்கு வைகோ கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 29, 2022

சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை நிறுத்தி வைப்பு ஒன்றிய அரசுக்கு வைகோ கண்டனம்


சென்னை,நவ.29- மதிமுக பொதுச் செயலாளர் மாநிலங்களவை உறுப் பினர் வைகோ வெளியிட்டுள்ள அறிக் கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

"சிறுபான்மை மாணவர்களுக்கான பள்ளிக் கல்வி உதவித் தொகை திட்டத் தின் கீழ், ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் இதுநாள் வரை ஒன்றிய அரசின் உதவித் தொகையைப் பெற்று கல்வி கற்று வந்தார்கள். இந்தத் திட்டத்திலும் கைவைத்துவிட்டது ஒன்றிய பாஜக அரசு. இந்த உதவித் தொகை, 9 மற்றும் 10 ஆம் வகுப்பில் பயிலும் மாணவர் களுக்கு மட்டுமே இனி கிடைக்கும் என்ற புதிய அறிவிப்பை ஒன்றிய அரசு இப்போது வெளியிட்டுள்ளது. இத னால் ஒன்றாம் வகுப்பு தொடங்கி, 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ - மாணவிகளுக்குக் கிடைத்து வந்த ஒன்றிய அரசின் கல்வி உதவித் தொகை இனி கிடைக் காது. இதனால் சிறுபான்மை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

சிறுபான்மை மக்கள் மீது வெறுப்பு அரசியல் நடத்தி வரும் மோடி அரசின் அநியாயமான தாக்கு தல் நடவடிக்கையே இது. சிறுபான்மையினருக்கு எதிரான ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையை மதிமுக வன்மையாகக் கண்டிக்கிறது. 9ஆம் வகுப்பு முதல் கல்லூரி வரை பயிலும் மாணவர்கள் மீதும் இந்தத் தாக்குதல் நாளை தொடர லாம் என்ற அச்சம் இப் போது அனைவரிடமும் எழுந்துள்ளது. கல்வி உத வித் தொகை வழங்குவதில் ஏற்கெனவே இருந்த நடை முறையே தொடர வேண் டும் என்று வலியுறுத்து கிறேன். தமிழ்நாடு முதல மைச்சர் மு.க. ஸ்டாலின், பிற மாநில முதலமைச்சர்களும், மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அர சின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து போர்க் குரல் எழுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்." 

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

No comments:

Post a Comment