ஆர்டெமிஸ் திட்டத்தின் கீழ் நிலவுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியாக வரும் 14ஆம் தேதியன்று அமெரிக்க விண் வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா ஒரு ராக்கெட்டை விண்ணுக்கு செலுத்த வுள்ளது. கடந்த 1969இல் முதன்முறையாக நிலவுக்கு மனிதர்களை அனுப்பி நாசா சாதனை படைத்தது. அதன்பின்னர் நில வுக்கு யாரும் மனிதர்களை அனுப்ப வில்லை. இந்நிலையில் நிலவுக்கு மீண் டும் மனிதர்களை அனுப்பும் முயற்சியில் நாசா இறங்கியுள்ளது.
அதன்படி ஆர்டெமிஸ் எனும் திட்டத் தின் கீழ் ஆர்டெமிஸ் 1 என்ற ராக்கெட்டை நவம்பர் 14ஆம் தேதியன்று விண்ணில் செலுத்தவுள்ளது. சோதனை முறையில் நடைபெறவுள்ள இந்த முயற்சி வெற்றி கரமாக நடந்தால் 2025க்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது.
முதற்கட்டமாக ஆர்டெமிஸ்-1 ராக்கெட் நிலவை ஆய்வு செய்யக்கூடிய ஓரியன் என்ற விண்கலத்தை சுமந்து செல் கிறது. திட்டப்படி புளோரிடா மாகாணத் தில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ஆர்டெமிஸ்-1 ராக்கெட் இந்திய நேரப்படி கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி மாலை 6 மணியளவில் செலுத்தப்படவிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ராக்கெட்டில் எரிபொருள் கசிவு ஏற்பட்டதைக் கண்டுபிடித்ததால் முயற்சி கைவிடப்பட்டது. பின்னர் செப்டம்பர் 3ஆம் தேதியன்று ஆர்டெமிஸ் 1 விண் ணில் செலுத்துவதற்குத் தயாரானது. ஆனாலும் சில தொழில்நுட்பக் காரணங் களால் பயணம் தடைபட்டது.
இந்நிலையில் தற்போது இன்ஜின் எரி பொருள் கசிவு உள்ளிட்ட கோளாறுகள் சரிசெய்யப்பட்ட நிலையில் நவம்பர் 14ஆம் தேதியன்று விண்ணில் செலுத்துவ தற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டை செலுத்து வதற்கான கவுன்ட்டன் நடைமுறைகள் நவம்பர் 12ஆம் தேதியன்று தொடங்கு கிறது என நாசா வட்டாரங்கள் தெரிவித் துள்ளன. இந்த முறை ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்படும் என அமெரிக்க விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர.
No comments:
Post a Comment