எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை இழுக்க முயன்ற பா.ஜனதா மூத்த தலைவர் நீதிமன்றம் தாக்கீது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 25, 2022

எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை இழுக்க முயன்ற பா.ஜனதா மூத்த தலைவர் நீதிமன்றம் தாக்கீது!

அய்தராபாத், நவ.25 டி.ஆர்.எஸ். சட்டமன்ற உறுப்பினர்களை  இழுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக் கில், பா.ஜனதா பொதுச்செயலாளர் (அமைப்பு) பி.எல்.சந்தோஷ் குற்ற வாளியாக சேர்க்கப்பட்டார். தெலுங் கானாவில் தெலுங்கானா ராட்டிர சமிதி ஆளுங்கட்சியாக இருக்கிறது. கடந்த மாதம், அந்த கட்சியை சேர்ந்த 4 சட்டமன்ற உறுப்பினர்களை சந் தித்த 3 பேர், பா.ஜனதாவில் சேர்ந்தால் தலா ரூ.100 கோடி தருவதாக பேரம் பேசியதாக புகார் எழுந்தது. அந்த 4 சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவ ரான ரோகித் ரெட்டி அளித்த புகாரின்பேரில், ராமச்சந்திர பாரதி, நந்தகுமார், சிம்மயாஜி சாமி ஆகி யோர் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டது. 

இந்த விவகாரம் குறித்து விசாரிக்க 7 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை தெலுங்கானா மாநில அரசு அமைத்தது. அக்குழு தனது விசா ரணை அடிப்படையில், பா.ஜனதா பொதுச்செயலாளர் (அமைப்பு) பி.எல்.சந்தோஷை குற்றவாளியாக சேர்த்துள்ளது. அவருடன் கேர ளாவை சேர்ந்த ஜக்கு சாமி, துஷார் வெல்லபள்ளி மற்றும் பி.சீனிவாஸ் ஆகியோரும் குற்றவாளிகளாக சேர்க் கப்பட்டுள்ளனர். தனிநீதிமன்றில் தாக்கல் செய்த விளக்க அறிக்கையில் சிறப்பு புலனாய்வு குழு இதை தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 21-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சந்தோஷ் உள்பட 4 பேருக்கு சிறப்பு புலனாய்வு குழு தாக்கீது அனுப்பியது. ஆனால், சீனிவாஸ் மட்டும் ஆஜ ரானார். மற்றவர்கள் ஆஜராகவில்லை. இதையடுத்து, தெலுங்கானா .நீதி மன்றம் உத்தரவின்பேரில், பி.எல். சந்தோஷுக்கு சிறப்பு புலனாய்வு குழு மீண்டும் தாக்கீது அனுப்பி உள்ளது. அதில், நாளையோ (26.11.2022) அல் லது 28-ஆம் தேதியோ விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறியுள்ளது.


No comments:

Post a Comment