ரேஷன் கடைகளில் ஆய்வு செய்ய செல்போன் செயலி உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 4, 2022

ரேஷன் கடைகளில் ஆய்வு செய்ய செல்போன் செயலி உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி

சென்னை, நவ.4 தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உணவுப் பங்கீட்டு கடைகளை ஆய்வு செய்யும் அலுவலர்களுக்கான செயலியை அமைச்சர் அர.சக்கரபாணி நேற்று (3.11.2022) அறிமுகம் செய்து வைத்தார்.

இது தொடர்பாக பேசிய அவர்,இந்த செயலி மூலமாக மாதந்தோறும் உணவுப் பங்கீட்டுக் கடைகள் செய்ய வேண்டிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதன் மூலம் மக்களுக்கு சிறந்த சேவை வழங்க முடியும்.இந்த ஆண்டு இரண்டு லட்சத்து 16 ஆயிரம் மெட்ரிக் டன் கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. உணவுப் பங்கீட்டு கடைகளில் 98.3 விழுக்காடு பயனாளிகள் பயோமெட்ரிக் முறையில் பொருட்களை வாங்குகிறார்கள்.திருவல்லிக்கேணி மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் சோதனை முறையில் 'கருவிழி ஸ்கேனர்' மூலம் பொருட்கள் விநியோ கிக்கப்பட்டு வருகின்றன. மிக விரைவில் தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்த முதலமைச் சரிடம் பரிந்துரைக்கப் படும். மேலும் ஜனவரி மாதம் முதல் தர்மபுரி மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் சிறுதானி யங்கள் சோதனை முறையில் உணவுப் பங்கீட்டுக் கடைகளில் விநியோகம் செய்யப்பட உள்ளது.அதன் பிறகு மற்ற மாவட்டங்களுக்கு சிறுதானியங்கள் விநியோகம் விரிவு படுத்தப்படும் என அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment