தமிழ் மண்ணிலிருந்து இந்திய வரலாறு எழுதப்படட்டும்! முதலமைச்சர் வேண்டுகோள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 28, 2022

தமிழ் மண்ணிலிருந்து இந்திய வரலாறு எழுதப்படட்டும்! முதலமைச்சர் வேண்டுகோள்

திருநெல்வேலி,நவ.28 ‘இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணிலிருந்து எழுதப் படட்டும்’ என்று பாளையங்கோட் டையில் பொருநை இலக்கியத் திருவிழாவை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்மொழியின் இலக்கிய மரபுகளைக் கொண்டாடும் வகை யில் பொருநை (தாமிரபரணி), வைகை, காவிரி, சிறுவாணி, சென்னை என அய்ந்து மண்ட லங்களில் இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி திருநெல் வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களை ஒருங்கிணைத்து முதல் விழாவாக ‘பொருநை இலக்கியத் திருவிழா’ பாளையங்கோட்டையில் 26.11.2022 அன்று தொடங்கியது.

இவ்விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்து, பதிவு செய்யப்பட்ட காட்சிப்பதிவு மூலம் உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் கேரளஎழுத்தாளர் கல்பட்டா நாராயணன், எழுத் தாளர் வண்ணதாசன், மாநில பிற் படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப் பன், பள்ளிக் கல்வித் துறை அமைச் சர் அன்பில் மகேஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையில் குறிப் பிட்டதாவது,

தமிழ் சமூகமானது இலக்கிய முதிர்ச்சியும், பண்பாட்டின் உச்சத் தையும் அடைந்த பெருமைக்குரியது. கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை என பல அகழாய்வுகள் வழியாக அறிவியல் பூர்வமாக நிறுவப்பட்டுள்ள நமது தொன்மை, நமது பெருமை. இந்தபெருமையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சென்று, அறிவுசார் சமூகத்தை வார்த்தெடுக்கும் இலக்குடன் 5 இடங்களில் இலக்கியத் திரு விழாக்கள் நடைபெறவுள்ளன. இதன் முதல் நிகழ்வாக அன்னை மடியான பொருநை ஆற்றங்கரை யில் நடைபெறும் இலக்கியத் திரு விழா சிறந்ததொரு முயற்சி. "இந்திய துணை கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணிலிருந்து எழுதப்படட்டும்". 

-இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.

கேரள எழுத்தாளர் கல்பட்டா நாராயணன் பேசும்போது, “தாய் மொழியின் பெருமையை பறை சாற்றும் வகையில் ஒவ்வொரு நதியின் கரையிலும் இலக்கியத் திரு விழாவை நடத்துவது அற்புத மானது. அகில இந்திய அளவில் சாகித்ய அகாடமி விருது வழங்கப் படுவதுபோல் தமிழ்நாடு சாகித்ய அகாடமி விருது உருவாக்கப்பட வேண்டும். இது காலத்தின் தேவை” என்றார்.

எழுத்தாளர் வண்ணதாசன் பேசும் போது, “தமிழ்நாட்டில் இந்தஅரசு பொறுப்பேற்றபின் முதல் முதலாக கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. கோவில்பட்டியில் அவருக்கு மணிமண்டபம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்த கக் கண்காட்சி நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ் அறிஞர்களுக்கு கனவு இல்லம் திட்டம் மூலம் வீடுகள் ஒதுக்கப்படுகின்றன. படைப் பாளிகள் சார்பில் அரசுக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்றார்.

மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் கூறும்போது, “இதுபோன்ற இலக்கிய விழாவை யாரும் நடத்தியதில்லை. இதற்காக பள்ளிக் கல்வித்துறையைப் பாராட் டுகிறேன். மொழியைக் காக்க மொழிப்போரும் எங்களால் நடத்த முடியும். மொழியை பெருமைப் படுத்த இதுபோன்ற இலக்கிய நிகழ்வுகளும் நடத்த முடியும்” என்று தெரிவித்தார்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேசும்போது, “தமிழக மக்கள் தொகையில் 6இல் ஒருவர் அரசுப் பள்ளி மாணவராக இருப்பது எங்களது துறைக்கு பெருமை. அரசுப் பள்ளியில் பயில் வது பெருமைக்குரியது என்ற நிலையை உருவாக்கி வருகிறோம். இலக்கியவாதிகள், படைப்பாளிகள், தமிழ்மொழி ஆகியவற்றுக்கு முக்கி யத்துவம் அளிக்கும்ஆட்சி தமிழ் நாட்டில் நடக்கிறது” என்று தெரிவித்தார்.

விழாவுக்கு ஆட்சியர் வே. விஷ்ணு  தலைமை வகித்தார். பொது நூலக இயக்கக இயக்குநர் க.இளம் பகவத், சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வகாப்,  மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், ஆணையர் சிவ கிருஷ்ண மூர்த்தி, எழுத்தாளர் பவா. செல்லத் துரை பங்கேற்றனர். 


No comments:

Post a Comment