பொதுவாக, ஒளிப்பதிவு கருவிகளில், ஜூம் லென்ஸ் எனப்படும், வெகு தொலைவு காட்சி ஆடிகள் மிகவும் சிக்கலானவை. இந்த ஆடியை திருகி, முன், பின்னாக நகர்த்தினால்தான் படங் களின் துல்லியத்தை, காட்சியின் விரிவை கூட்டவோ, குறைக்கவோ முடியும்.ஆனால், அமெரிக்காவிலுள்ள மாசாசூசெட்ஸ் தொழில் நுட்ப நிலைய - எம்.அய்.டி., விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள லென்ஸ் வித்தியாசமானது.
பழைய 'சிடி' மற்றும் 'டிவிடி' தயாரிக்க பயன்படும் ஜெர்மானியம், ஆன்டிமனி, டெலுரியம் ஆகியவற்றுடன், புதிதாக செலினியம் என்ற வேதிப் பொருளையும் கலந்து, புதிய ஆடியை, எம்.அய்.டி., விஞ்ஞானிகள் தயாரித் துள்ளனர்.
இந்த ஆடி மீது வெப்பத்தை செலுத்தினால், அதை அசைக்காமலேயே, காட்சியில் மாற்றங் களை கொண்டுவர முடியும். அதே சமயம், ஆடியின் கண்ணாடித் தன்மையில், எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை.
ஆடியின் குவியப் புள்ளி மட்டும் வெப்பத்திற் கேற்ப மாறுகிறது. இது ஜூம் லென்சின் வேலையை கச்சிதமாக செய்யப் போதுமானது.
இந்நுட்பம் ட்ரோன்கள், செல்போன்கள், இரவு பார்வை கருவிகள் போன்றவற்றுக்கான, சிறிய ஜூம் லென்சுகளை தயாரிக்க வருங்காலத்தில் பயன்படும். இக்கண்டுபிடிப்பை பற்றிய ஆய்வுக் கட்டுரை, 'நேச்சர் கம்யூனிகேசன்ஸ்' இதழில் வெளிவந்துஉள்ளது.
No comments:
Post a Comment