அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தைத் தூண்டும் “வானவில் மன்றம்” தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 28, 2022

அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தைத் தூண்டும் “வானவில் மன்றம்” தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (28.11.2022) திருச்சிராப்பள்ளி மாவட்டம், காட்டூர் பாப்பாக்குறிச்சி, அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தைத் தூண்டும் “வானவில் மன்றத்தையும்”,  100 நடமாடும் அறிவியல் மற்றும் கணித ஆய்வக வாகனங்களையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாணவர்கள் மேற்கொண்ட அறிவியல் பரிசோதனைகளைப் பார்வையிட்டார். இந்நிகழ்வின்போது,  நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர்மு.அன்பழகன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, சு.திருநாவுக்கரசர், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ். இனிகோ இருதயராஜ், எஸ்.கதிரவன், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வி ஆணையர் க. நந்தகுமார், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் இரா. சுதன்,  திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் எம். பிரதீப் குமார்,  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.


No comments:

Post a Comment