காரைக்கால், நவ. 4- காரைக்கால் மண்டல திராவிடர் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் 03-.11.-2022 அன்று திராவிடர் கழகத் தின் பொதுச்செயலாளர் துரை. சந்திரசேகரன் தலைமையில், காரை மண்டல திராவிடர் கழக தலைவர் ,குரு கிருஷ்ணமூர்த்தி, காரைக்கால் மண்டல திராவிடர் கழக செயலாளர் பொன். பன் னீர் செல்வம் முன்னிலையில்
3.11.2022 காலை 10 மணி அளவில் காரைக்கால் திருநள்ளாறு சாலை யில் உள்ள தமிழ் பழச்சாறு நிலையத்தில் நடைபெற்றது.
தீவிரமாக விடுதலை சந்தா சேர்ப்பினை கழகத் தோழர்கள் செய்து காரைக்கால் மண்டலத் திற்கு கொடுக்கப்பட்டுள்ள இலக்கினை முடித்து வரும் டிசம்பர் மாதம் 2ஆம் தேதி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் பிறந்த நாளில் ஒப்படைக்க வேண்டும் இதற்காக கழகத் தோழர்கள் தீவிரமாக களப்பணி ஆற்ற வேண்டும் என்று கழகத் தின் பொதுச் செயலாளர்கள் தனது கருத்துரையின் போது குறிப்பிட்டார்கள்.
கழகத்திற்கு அதிக அளவில் இளைஞர்களை சேர்க்க வேண்டும் கல்லூரி பள்ளிகளில் பிரச்சாரம் செய்து கழகத்திற்கு மாணவர்களை சேர்க்க வேண் டும் என்று அறிவுறுத்தினார்கள்.
கழகத் தோழர்கள் விடுதலை சத்தா சேர்ப்பது பற்றியும் கழ கத்தின் வளர்ச்சி பற்றியும் தங்க ளது கருத்துகளை வழங்கினார் கள். இறுதியாக மகளிர் அணி அமைப்பாளர் செ. சிறீதேவி நன்றி கூறினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
1. திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் 90ஆவது பிறந்த நாளை காரைக்கால் மண்டலம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் தெருமுனைப் பிரச்சாரங்கள் சுவரெழுத்து விளம்பரங்கள் மூலம் கொள்கை பிரச்சார விழா வாக கொண்டாடுவது என தீர்மானிக்கப்பட்டது.
2. காரைக்கால் மண்டலத் திற்கு ஒதுக்கப்பட்டுள்ள விடு தலை சந்தாவை வசூல் செய்து ஆசிரியர் அவர்களின் 90ஆவது பிறந்தநாளன்று வழக்குவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கலந்துரையாடல் கூட் டத்தில் காரைக்கால் மண்டல திராவிடர் கழக இளைஞரணி தலைவர் மு.பி. பெரியார் கண பதி, மண்டல திராவிடர் கழக துணை செயலாளர் செ.செந் தமிழன், மண்டல மகளிர் அணி அமைப்பாளர் செ. சிறீதேவி, மண்டல இளைஞர் அணி அமைப்பாளர் மு.க. ஸ்டாலின், மாணவர்கழக அமைப்பாளர் சசிகுமார், மாணவர் கழக செய லாளர் பிளேமன், நிரவி தி.மனோ, திருபட்டினம் சிவபுகழ், காரைக் கால் அ.கி.தமிழ், நிரவி செ.இனியவன், மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment