தீக்குளித்த தீரர், 85 வயது முதியவர், தாழையூர் தங்கவேலு என்ற தி.மு.க. செயல் வீரர் ஹிந்தித் திணிப்புக்கு எதிராக உள்ள உணர்வுகளைக் காட்ட தனது உடலில் தீ வைத்துக்கொண்டு தீக்குளித்தார்!
‘‘அச்செயல் ஊக்குவிக்கக் கூடிய செயல் அன்று; உயிர்த் தியாகம் வேண்டாம்; சட்டப் போராட்டம் முதல் பலமுனைகள் - வழிகள் உள்ளன. அதுபோன்ற முடிவுக்கு யாரும் வராதீர்கள்'' என்று நமது முதலமைச்சர் உருக்கமான வேண்டுகோள் விடுத்து அந்தத் தியாகச் செம்மலுக்கு வீர வணக்கம் கூறியது நாடறிந்த செய்தி.
அவர் தீக்குளித்த செய்தியை வெளியிட்டுள்ள ஆங்கில ஹிந்து நாளேடு (டில்லி - சென்னை பதிப்பு களில்) எப்படி அந்தச் செய்தியை வெளியிட்டு, பத்திரிகை ‘விஷய தானமாக' அல்ல ‘விஷம தானமாக' வெளியிட்டுள்ளது என்பதைப் பாருங்கள்.
“Assistance for overcoming suicidal thoughts is available on the State’s health helpline 104,Tele-MANAS 14416, and Sneha’s Suicide Prevention Helpline 044-24640050.”
மனநலம் குன்றியா அவர் தீக்குளித்தார்!
இது மனச்சாட்சியை விற்ற பச்சைப் பூணூல் தனமல்லவா?
இதற்கு எதிராக உணர்வுள்ள மொழிப் பற்றாளர்களின் கண்டனங்கள் பாயவேண்டாமா?
No comments:
Post a Comment