மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநராக நாகராஜமுருகன் நியமனம் கல்வித்துறை உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 4, 2022

மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநராக நாகராஜமுருகன் நியமனம் கல்வித்துறை உத்தரவு

சென்னை, நவ. 4- மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குந ராக நாக ராஜமுருகனை நியமனம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநராக இருந்த அ.கருப்ப சாமி ஓய்வு பெற்றதை தொடர்ந்து, அந்த இடத் துக்கு புதிய இயக்குநரை நியமித்து அரசு உத்தரவிட்டு இருக்கிறது. 

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செய லாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:- 

மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநராக பணியாற்றி வந்த அ.கருப்பசாமி வயது முதிர்வின் காரணமாக பணியில் இருந்து ஓய்வு பெற அனுமதித்து ஆணை வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1.11.22 முதல் காலியாக இருக்கும் இயக்குநர் பணியிடத்துக்கு, ஒருங் கிணைந்த பள்ளிக் கல்வி கூடுதல் உதவி திட்ட இயக்குநர் எஸ்.நாகராஜமுருகனை நியமனம் செய்து அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment