முனைவர் ய.மணிகண்டன் தலைமையில் இணைய வழியில் நடைபெறுகிறது!
சென்னை, நவ.30- சென்னை பல்கலைக் கழக தமிழ் மொழித்துறை சார்பில் முதுபெரும் பெரியாரியல் முன் னோடி திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 90ஆவது பிறந்த நாள் விழா இணையவழிச் சிறப்பு உரைய ரங்கம் 1.12.2022 வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் வலையொளி நேரலை இணைப்பில் நடைபெறு கிறது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ் மொழித் துறை தலைவர் முனைவர் ய.மணிகண்டன் தலைமை வகிக் கிறார்.
கவிஞர் தஞ்சை இனியன் வாழ்த் துக் கவிதை பாடுகிறார்.
இந்நிகழ்வில் முனைவர் பழ. அதியமான், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலை பல்கலைக் கழகம்) பெரியார் சிந்தனை உய ராய்வு மய்யம் பேராசிரியர் முனை வர் நம்.சீனிவாசன், முனைவர் இரா.தாமோதரன் (அறவேந்தன்), முனைவர் ஆ.திருநீலகண்டன் ஆகி யோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
நிகழ்ச்சியை முனைவர் வாணி அறிவாளன், முனைவர் வே.நிர் மலா செல்வி ஆகியோர் ஒருங்கி ணைக்கின்றனர்.
No comments:
Post a Comment