தருமபுரி மண்டலத்தில் மாவட்டக் கழகங்கள் சார்பில் திரட்டியளித்த விடுதலை சந்தாக்கள் இரண்டாவது சுற்றில் மூன்றாவது தவணையாக ரூ.2,80,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன், மாநில அமைப்பு செயலாளர்கள் ஊமை .செயராமன், வி. பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினர். உடன்: தென் சென்னை மாவட்ட தலைவர் இரா .வில்வநாதன் , மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி கும்மிடிபூண்டி மாவட்ட தலைவர் புழல் ஆனந்தன், ஆவடி மாவட்டச் செயலாளர் க.இளவரசன், அம்பத்தூர் பகுதி தலைவர் பூ.இராமலிங்கம்,மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ. சுரேசு.
திமுக வர்த்தக அணி மாநில துணைச் செயலாளர் பி. தர்மசெல்வன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து விடுதலை சந்தா ரூ.1,00,000த்தை வழங்கினார்.
உடன் மாநில ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன்,மாநில அமைப்புச் செயலாளர்கள்
வி. பன்னீர்செல்வம், ஊமை ஜெயராமன், தர்மபுரி பொதுக்குழு உறுப்பினர் கடைமடை ஆ.தீர்த்தகிரி, தென் சென்னை மாவட்டத்தலைவர் இரா.வில்வநாதன், தென் சென்னை மாவட்டச்செயலாளர் நா.பார்த்தசாரதி (21.11.2022 பெரியார் திடல்).
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான இ.பெ.செந்தில்குமார் விடுதலை நாளிதழுக்கு 100 சந்தாக்களுக்கான தொகை ரூபாய் 2,00,000த்தை (இரண்டு லட்சம்) மாவட்ட கழக தலைவர் இரா. வீரபாண்டியன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் நா.கமல்குமார் ஆகியோரிடம் வழங்கினார். மாவட்ட திமுக துணை செயலாளர் மு.பிலால் உசேன் உடன் உள்ளார்.
தென் சென்னை மாவட்டத்தில் விடுதலை சந்தாக்கள் திரட்டும் பணி மாவட்டத்தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில், மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி முன்னிலையில் நடைபெற்றது. மனிதநேய அறக்கட்டளை நிறுவனர், மேனாள் சென்னை மேயர் சைதை எஸ்.துரைசாமி (அ.தி.மு.க.) விடுதலை வளர்ச்சி நிதி ரூ.90,000 மற்றும் விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினார். உடன் மாநில அமைப்புச் செயலாளர்கள் வி.பன்னீர்செல்வம், ஊமை.செயராமன்.
தென்சென்னை மாவட்டத்தில் விடுதலை சந்தாக்கள் திரட்டும் பணி மாவட்டத்தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில் மாவட்டச் செயலாளர் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி முன்னிலையில் நடைபெற்றது. தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் அய்ந்து வாழ்நாள் விடுதலை சந்தாக்களுக்கு ரூ.1,00,000/= மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினார். உடன் மாநில அமைப்புச் செயலாளர்கள் வி.பன்னீர்செல்வம், ஊமை.செயராமன்.
தாம்பரம் மாநகராட்சி துணைமேயர் ஜி.காமராசு விடுதலை வாழ்நாள் சந்தாக்கள் அய்ந்திற்கு ரூ.1,00,000த்தை மண்டலத் தலைவர் தி.இரா.இரத்தினசாமியிடம் வழங்கினார். உடன்: மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில அமைப்புச் செயலாளர்கள் வி.பன்னீர்செல்வம்,
ஊமை.செயராமன், பொறியாளர்
தி.பர்தீன்
தென்சென்னை மாவட்டத்தில் விடுதலை சந்தாக்கள் திரட்டும் பணி மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில் மாவட்டச் செயலாளர் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி முன்னிலையில் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணைப்பொதுச்செயலாளர் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி நான்கு விடுதலை வாழ்நாள் சந்தாவிற்கு ரூ.80,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினார். உடன்: மாநில அமைப்புச் செயலாளர்கள் வி.பன்னீர்செல்வம், ஊமை.செயராமன்.
மன்னார்குடி கழக மாவட்டம், கழக பேச்சாளர் வழக்குரைஞர் சி.சிங்கார வேலர் விடுதலை 20 ஆண்டு சந்தாகளுக்கான தொகை ரூ.40,000த்தை பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன் மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன்,மாவட்ட செயலா ளர் கோ.கணேசன், மாவட்ட அமைப்பாளர் ஆர்.எஸ்.அன்பழகன், கழக பேச்சாளர் இராம.அன்பழகன், பகுத்தறிவு ஆசிரியரணி மாவட்ட செயலாளர் கோபால், மன்னை ஒன்றிய தலைவர் மு.தமிழ் செல்வன், நீடா ஒன்றிய செயலாளர் சக்தி வேல், மன்னை முரளிசங்கர் (ப.க) (17-11-2022).
விடுதலை சந்தாக்கள் திரட்டும் பணி தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில் மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி முன்னிலையில் நடைபெற்றது. மேனாள் சட்டமன்ற திமுக உறுப்பினர் கு.க.செல்வம் வாழ்நாள் விடுதலை சந்தா ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினார். உடன்: மாநில அமைப்புச் செயலாளர்கள் வி.பன்னீர்செல்வம், ஊமை.செயராமன்.
பழனி சட்டமன்றத் தொகுதி விடுதலை சந்தா தொகை ரூ.20,000த்தை பழனி நகர் மன்ற தலைவர் இரா. உமாமகேஸ்வரி மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகரிடம் வழங்கினார். உடன்: மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன், பழனி மாவட்ட தலைவர் மா. முருகன், பழனி மாவட்ட செயலாளர் பொன்.அருண்குமார், பழனி நகரத் தலைவர் சி.இராதா கிருட்டிணன், நெய்க்காரப்பட்டி திராவிட மாணவர் கழக தோழர்கள் கவிஞர் கு. கிருட்டிணன், ம.ஆத்திமணி,க.மாரிகண்ணு ஆகியோர்(20.11.2022)
தஞ்சாவூர் மாவட்டம் தி.மு.க தஞ்சை கிழக்கு ஒன்றிய செயலாளர்
சோ.செல்வக்குமார் விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்: மண்டலத் தலைவர் மு.அய்யனார், மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மாவட்ட ச்செயலாளர் அ.அருணகிரி,மாநகரத் தலைவர் பா.நரேந்திரன்,மாநகர செயலாளர் அ. டேவிட் (21-11-2022)
தஞ்சாவூர் மகப்பேறு சிறப்பு மருத்துவர் த. தமிழ்மணி விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்: மண்டலத் தலைவர் மு.அய்யனார்,மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி,மாநகரத் தலைவர் பா.நரேந்திரன்,மாநகர செயலாளர் அ. டேவிட் (21-11-2022)
ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் விடுதலை சந்தா தொகை ரூ.10,000த்தை ஒட்டன்சத்திரம் அய்யாமணி மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகரிடம் வழங்கினார். உடன்: மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன், பழனி மாவட்ட தலைவர் மா. முருகன், பழனி மாவட்ட செயலாளர் பொன்.அருண்குமார் ,பழனி ப.க. தலைவர் ச.திராவிடச் செல்வன், பழனி நகரத் தலைவர் சி.இராதா கிருட்டிணன், திண்டுக்கல் மண்டல இளைஞரணி செயலாளர் குண.அறிவழகன் ஆகியோர் (20.11.2022)
No comments:
Post a Comment