புதுடில்லி, நவ.26 கேரள கடற் பகுதியில் கடந்த 2012ஆ-ம் ஆண்டு மீன் பிடித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்களின் படகில், அந்த வழியாக சென்ற இத்தாலி கப்பலில் இருந்த அந்த நாட்டு கடற்படை வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2 மீனவர்கள் உயிரிழந்தனர். இந்த நிகழ்வில் இத்தாலி கடற்படை வீரர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்கள் பிணையில் விடு விக்கப்பட்டு, சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பன் னாட்டு அளவில் பெரும் அதிர் வலைகளை கிளப்பிய இந்த விவகாரத்தில் இத்தாலி அரசு ரூ.10 கோடி இழப்பீடு வழங்கியது. இதில் கொல்லப்பட்ட மீனவர்களின் குடும் பத்துக்கு தலா ரூ.4 கோடியும், மீத முள்ள ரூ.2 கோடி படகு உரிமையாளர் ஃபிரெடிக்கும் வழங்குமாறு உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூன் 15-ஆம் தேதி உத்தரவிட்டது. ஆனால் இந்த நிகழ்வால் தங்களுக்கு ஏற்பட்ட துயருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என படகில் இருந்த மேலும் 7 மீனவர்கள் வழக்கு தொடர்ந் தனர். படகில் இருந்த மேலும் 2 மீனவர்கள் வழக்கு காலத்தில் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களது குடும்பத்தினரும் மனு தாக்கல் செய் திருந்தனர்.
இதை விசாரித்த உச்சநீதி மன்றம், படகு உரிமையாளருக்கு வழங்க உத்தரவிட்ட ரூ.2 கோடியில் மேற்படி 9 மீனவர்களுக்கும் தலா ரூ.5 லட்சம் வீதம் வழங்கவும், மீதமுள்ள ரூ.1.55 கோடியை படகு உரிமை யாளருக்கும் வழங்குமாறும் உத்தரவிட்டு நேற்று (25.11.2022) தீர்ப்பை மாற்றியமைத்து வழங்கினர்.
அடுத்த நிறுத்தம் பற்றிய ஒலி அறிவிப்பு திட்டம்: சென்னை மாநகர பேருந்துகளில் இன்று முதல் துவக்கம்
சென்னை, நவ. 26 பேருந்து நிறுத்தம் பற்றிய ஒலி அறிவிப்பு திட்டம் சென்னை மாநகர பேருந்துகளில் தொடங்கப்படுகிறது.
சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முதற்கட்டமாக "புவிசார் நவீன தானியங்கி அறிவிப்பான் (GPS) மூலம் பேருந்து நிறுத்தம் ஒலி அறிவிப்பு" திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
இதன் மூலம் சென்னை மாநகர பேருந்துகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அடுத்து வரக்கூடிய பேருந்து நிறுத்தம் குறித்த அறிவிப்பு பேருந்தில் பொருத்தப்படும் ஸ்பீக்கர் மூலம் பயணியருக்கு தெரிவிக்கப்பட உள்ளது. பேருந்து நிறுத்தத்திற்கு 300 மீட்டர் முன்பாக பேருந்து நிறுத்ததின் பெயர் குறித்த தகவல் ஒலிபரப்பப்படும் என மாநகரப் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment