கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் ஓட்டுநர், இரவுக் காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத் தம் 8 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப் படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 05.12.2022க்குள் விண்ணப் பித்துக் கொள்ளுங்கள்.
ஓட்டுநர் காலியிடங்களின் எண்ணிக்கை: 3
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
ஊதியம் : ரூ.19,500 - 62,000 இரவுக் காவலர் காலியிடங்களின் எண்ணிக்கை : 5
கல்வித் தகுதி : எழுதப் படிக்க தெரிந் திருக்க வேண்டும். வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம் : ரூ. 15,700 - 50,000தேர்வு செய் யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கீழ்கண்ட இணையதளப் பக்கங்களில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத் தினை அச்செடுத்து பூர்த்தி செய்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத் தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
ஓட்டுநர், இரவுக் காவலர், முகவரி : மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), மாவட்ட ஆட்சியரகம் (வளர்ச்சிப் பிரிவு), கோவை - 641018
விண்ணப்பிக்கக் கடைசி தேதி : 05.12.2022 இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவ ரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
No comments:
Post a Comment