சென்னை, நவ.1 தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மய்யம் அறிவித்து உள் ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங் களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று பள் ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட் டுள்ளது.
கனமழை காரணமாக செய்யார், வெம் பாக்கம், வந்தவாசி மற்றும் சேத்துப்பட்டு ஆகிய வட்டங்களை சார்ந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள் ளது. தமிழ்நாட்டில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட் டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இதன் எதிரொலி யால், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக் காலின் இன்று கனமழை பெய்கிறது. மேலும், தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment