8 ஆண்டுகளில் மோடி ஆட்சியில் இந்தியாவுக்கு ரூ.80 லட்சம் கோடி கடன்! தெலங்கானா ராஷ்டிர சமிதி குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 1, 2022

8 ஆண்டுகளில் மோடி ஆட்சியில் இந்தியாவுக்கு ரூ.80 லட்சம் கோடி கடன்! தெலங்கானா ராஷ்டிர சமிதி குற்றச்சாட்டு

அய்தராபாத், நவ. 1- ‘பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த 8 ஆண்டுகால ஆட்சியில், இந்தியா ரூ.80 லட்­சம் கோடி கடன் வாங்கியுள்­ளது; ஒன்றியத் தில் ஆளும் பா.ஜ.க., நாட்டை கடன் வலையில் தள்ளிவிட்டது’ என்று தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) சாடி யுள்­ளது. 

தெலங்கானாவில் ஆளும் டிஆர்எஸ் கட்சி, பாஜகவுக்கு எதிரான ‘அரசியல் குற்­றப்பத்திரி கையை அய்தராபாத்தில் 29.10.2022 அன்று வெளியிட்டது. 

பின்னர், அக்கட்சியின் செயல்தலைவர் கே.டி. ராமராவ் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

சுதந்திரத்துக்குப் பிறகான 67 ஆண்டுகளில் பல்வேறு பிரதமர்களின் ஆட்சிக் காலத்தில் இந் தியாவால் வாங்கப்பட்ட ஒட்டுமொத்த கடன் ரூ.55.87 லட்­சம் கோடி யாகும். ஆனால், கடந்த 2014-இல் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் ரூ.80 லட்சம் கோடி கடன் வாங்கப் பட்டுள்ளது. கடன்களுக் காக கடந்த 2014-2015இல் ஒன்றிய அரசால் செலுத் தப்பட்ட வட்டி தொகை யானது, மொத்த வருவா யில் 35.1 விழுக்காடாக இருந்தது. 2021இல் இது 43.7 விழுக்காடாக அதி கரித்து விட்டது. ஒன்றிய அரசின் கடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 61.6 விழுக் காட்டை தொட்டுள்­ளது. இதன் மூலம் நாட்டையே கடன் வலை யில் ஆளும் பாஜக தள்ளி விட்ட து. 

பெட்ரோல், டீசல் மற்றும் இதர பொருள்க ளின் விலை உயர்வால் மக்கள் மோசமான நிலைக்கு ஆளாக்கப் பட்டுள்ளனர் என்றார் அவர். 

டி.ஆர்.எஸ். வெளியிட்ட அரசியல் குற்றப் பத்திரிகையில், ‘கைத்தறி பொருள்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. விதித்ததன் மூலம் அத்துறையை பின் னோக்கித் தள்ளியது ஒன் றிய அரசு. இந்த வரியை 12 விழுக்காடாக அதிக ரிக்கவும் திட்டமிடப் பட்டு வருகிறது. தெலங் கானாவில் உள்ள கிரா மங்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்கும் திட்டத் துக்காக ரூ.19,000 கோடி வழங்க ஒன்றிய அரசுக்கு நிட்டிஆயோக் பரிந்து ரைத்திருந்தது. ஆனால், 19காசுகூட ஒன்றிய அரசு தரவில்லை. 

தெலங்கானா அரசின் பழங்குடியினர் இடஒதுக் கீட்டு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் 5 ஆண்டுகளாக ஒன்றிய அரசு கிடப்பில் போட்டு உள்ளது. இது மாநிலத் தில் உள்ள பழங்குடியி னருக்கு இழைக்கப்படும் அநீதியாகும்’ என்று தெரி விக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment