தமிழில் மருத்துவப் படிப்புக்கு 7 பாடப் புத்தகங்கள் தயார் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 15, 2022

தமிழில் மருத்துவப் படிப்புக்கு 7 பாடப் புத்தகங்கள் தயார் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை,நவ.15- "முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான 7 பாடப் புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க் கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மேலும், 7 புத்தகங்களை மொழி பெயர்க்கும் பணி நடைபெற்று வரு கிறது" என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், உலக நீரிழிவு நோய் தினம் 2022அய் முன்னிட்டு நீரிழிவு நோயாளிகளுக்கு குளுக்கோமீட்டர் கருவிகளை வழங்கி, நீரிழிவு நோய் விழிப்புணர்வு வினாடி - வினா போட்டியில் வெற்றி பெற்ற மருத்துவ மற்றும் செவிலியர் மாணவர் களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ் வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (நவ.14) வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

"இந்தியாவில் நீரிழிவு நோய் தாக்கத்திற்கு உள்ளானவர்கள் 10-_12 விழுக்காடாகவும், தமிழ்நாட்டில் 13 விழுக்காடாகவும் உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கப்பட்ட 'மக்களை தேடி மருத்துவம்' திட்டத் தினால் நீரிழிவு நோயாளிகள் கண் டறியப்பட்டு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில், நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு இன்று வரை கண்டறியப்பட்டவர்கள் 26,40,727 பேர். நீரிழிவு நோய் மற்றும் இரத்த அழுத்த நோய் பாதிப் புள்ளவர்கள் 19,26,136 பேர். ஆக மொத்தம் நீரிழிவு நோயினால் பாதிக் கப்பட்டவர்கள் என்று கண்டறிப்பட் டவர்கள் 45,66,863 பேர். தமிழ்நாட்டில் உள்ள மக்கள் தொகையில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் 72 சதவீதம் பேர் பரிசோதிக்கப்பட் டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஓராண்டுகளாக முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களின் பாடப் புத்தகங்களை தமிழில் மொழி பெயர்க்கும் பணி நடைபெற்று வரு கிறது. இந்த பணி செய்து முடிப்பதற்காக 3 மருத்துவர்களுக்கு அயற்பணி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி,   காயவியல் (3 க்ஷிஷீறீuனீமீs), மருத்துவ தொழில்நுட்பவியல், குழந்தைகள் நல மருத்துவம், மயக்கியல், குழந்தைப் பருவ ரத்த நோய்கள் மற்றும் புற்று நோய்கள், இயன்முறை மருத்துவம் மற்றும் நோய் தீர்க்கும் உணவு மருத் துவம் ஆகிய 7 புத்தகங்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு தயார் நிலை யில் உள்ளது. மேலும் 7 புத்தகங்கள் மொழிபெயர்க்கும் பணி நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தார்.

 இந்நிகழ்வில் பெருநகர சென்னை மாநகராட்சி பணிகள் குழுத் தலைவர் நே.சிற்றரசு, கீழ்ப்பாக்கம் அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மரு.சாந்திமலர், மருத்துவ மனை கண்காணிப்பாளர் மரு.ஆயிஷா ஷாகின், நிலைய மருத்துவ அலுவலர் மரு.வாணி, நீரிழிவு நோய் துறைத் தலைவர் மரு.அ.சண்முகம், மருத்து வர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment