சென்னை, நவ.3 தமிழ்நாடு மின் துறையின் முன்னெச்சரிக்கை நடவடிக் கையால் கனமழையிலும் வீடுகள், கடைகள், தொழிற்சாலைகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்பட் டுள்ளது என அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை, அண்ணா சாலையில் உள்ள மின்சாரத் துறை தலைமையத்தில் நேற்று தமிழ்நாட்டில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழைக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் சிறப்பு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் ராஜேஷ் லக்கானி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த ஆய்வுக் கூட்டத்தின் போது தமிழ்நாட்டில் இதுவரை வடகிழக்கு பருவமழையினை எதிர் கொள்வதற்காக எடுக்கப்பட்ட முன் னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆய்வினை காணொலி காட்சியின் வாயிலாக அமைச்சர் செந்தில்பாலாஜி கேட்டறிந்தார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டி யளித்த அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியிருப்பதாவது:
மின்துறையிடம் வடகிழக்கு பருவ மழையினை எதிர்கொள்ளும் வகையில், 18,380 மின்மாற்றிகள், 2 லட்சம் மின் கம்பங்கள் மற்றும் 5,000 கி.மீ. மின்கடத்திகள் உள்ளன. அவற்றுள் 40,000 மின்கம்பங்கள் மாற்றப்பட்டுள் ளன. சாய்ந்து இருந்த 32,685 மின் கம்பங்கள் சரிசெய்யப்பட்டது. மேலும், புதியதாக 25,996 மின் கம்பங்கள் இடைச்செருகல் செய்யப்பட்டுள்ளன. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இதுவரை 2,788 பழுதடைந்த மின்பெட்டிகள் சரிசெய்யப்பட்டிருக் கின்றன. 3,424 மின்பெட்டிகளில் பரா மரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டி ருக்கின்றன. இதுதவிர, நேற்று வரை 3,066 பில்லர் பெட்டிகள் தரைமட்டத்திலிருந்து ஒரு மீட்டர் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளன.
மின்னகத்தில் இதுவரை மொத்தம் 12,36,725 புகார்கள் பெறப்பட்டு அவற்றுள் 12,27,281 புகார்களுக்கு தீர் வுகள் காணப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதுமாக ஒட்டுமொத்தமாக 44 மின் பகிர்மான வட்டங்களிலும் 760 குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு குழுவிலும் 15 முதல் 20 பணியாளர்கள் அமர்த்தப்பட்டு 760 குழுக்கள் இந்த மழையை எதிர்கொண்டு சீரான மின் விநியோகம் செய்வதற்காக தயார் நிலையில் உள்ளன.
மேலும், வடகிழக்கு பருவமழைக்காக மின்சாரத் துறை தரப்பில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கனமழையிலும் வீடு, கடைகள், தொழிற் சாலைகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு கூறினார்.
No comments:
Post a Comment