பொருளாதார பாதுகாப்பற்ற நிலையில் 69 சதவிகித இந்தியக் குடும்பங்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 14, 2022

பொருளாதார பாதுகாப்பற்ற நிலையில் 69 சதவிகித இந்தியக் குடும்பங்கள்!

புதுடில்லி, நவ.14-  இந்தியக் குடும்பங்களின் வருவாய், செல வுகள், சேமிப்புகள் குறித்து, ‘ஒரு தனியார் தொலைக்காட்சி’ நடத் திய ஆய்வின் அடிப்படையில் இந்திய குடிமக்களின் தரத்தை கணக்கீடு செய்யும்  அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட் டுள்ளது. அதில், இந்தியாவின் 69 சதவிகித குடும்பங்கள் பொரு ளாதார பாதுகாப்பில்லாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

சராசரியாக 4.2 உறுப்பினர் களைக் கொண்ட இந்தியக் குடும் பங்களின் சராசரி மாத வருமானம் ரூ.23 ஆயிரமாக உள்ளது. அதிலும்,  46 சதவிகிதத்திற்கு அதிகமான குடும்  பங்கள் மாதம் ரூ. 15 ஆயிரத்திற் கும் குறைவான வருவாயையே ஈட்டு கின்றன. 3 சதவீத இந்தியக் குடும்பங் கள் மட்டுமே ஆடம்பரமான வாழ்க் கைத் தரத்தைக் கொண்டுள்ளன. அவற்றில் பெரும்பாலான குடும் பங்கள் அதிக வருவாய் கொண்ட உயர்தர மற்றும் உயர்-நடுத்தரப் பிரி வைச் சேர்ந்தவைகள் என்று தெரிய வந்துள்ளது. 

“இந்தியாவின் 70 சதவிகிதக்  குடும்பங்கள் ஏதோ ஒரு வகையில் சேமித்து வைக்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளன. வங்கி வைப்புத்  தொகை, காப்பீடு, அஞ்சலக சேமிப்பு, தங்கத்தில் முதலீடு செய் வது போன்ற வழிமுறைகளைப் பின்பற்றி அந்தக் குடும்பங்கள் தங்களது வருவாயை சேமிக் கின்றன

இந்த சேமிப்பில், வங்கி, அஞ்ச லக சேமிப்பு, ஆயுள் காப்பீடு மற்றும் தங்கம் ஆகியவையே முக்கிய இடம் பெற்றுள்ளன. இந் தியக் குடும்பங்கள் மேற்கொள் ளும் 64 சதவிகித  சேமிப்புகள் வங்கிகள் மூலம் மேற்  கொள்ளப் படுகின்றன. 19 சதவிகிதக் குடும் பங்கள் மட்டுமே காப்பீடுகள் மூலம் சேமிக்கின்றன.  எனினும், குறைந்த வருவாய் பிரிவினரி டையே சேமிக்கும் ஆர்வம்  மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. இருந்தாலும், இந்தியாவின் அய்ந் தில் இரண்டு குடும்பங்களால்  தங்கள் வருவாயை சேமித்து வைக்க முடிவதில்லை. இந்த விவகாரத் துக்கு அரசு கொள்கை வகுப்பா ளர்களும், சந்தை நிறு வனங்களும் அதிக கவனம் செலுத்த வேண்டி யுள்ளது. 22 சதவிகித இந்தியக் குடும்பங்  கள் பங்குகள், பரஸ்பர நிதிகள், யுலிப் மற்றும் தங்கம், நிலம் போன்ற சொத்  துக்களில் முதலீடு செய் துள்ளன. இதில், நிலம் போன்ற சொத்துகளில் தான் முதலீடு அதிகமாக (18 சதவிகிதம்) உள் ளது. அதனைத் தொடர்ந்து  பரஸ்பர நிதிகள் (6 சதவிகிதம்), பங்குச் சந்தை முதலீடு (3 சதவி கிதம்), காப் பீட்டுத் திட்டங்கள் அல்லது யுலிப்கள் முதலீடு (3 சதவிகிதம்) என்ற அளவில் உள்ளன.

No comments:

Post a Comment