உலகம் முழுவதும் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 62.46 கோடியாக உயர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 28, 2022

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 62.46 கோடியாக உயர்வு

வாசிங்டன், நவ. 28- உலக அள வில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64.61 கோடி யாக அதிகரித்துள்ளது.  

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற் படுத்தி வருகிறது. கரோ னாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடை பெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. 

இந்நிலையில், உலகம் முழுவதும் கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 64 கோடியே 61 லட்சத்து 32 ஆயிரத்து 673 ஆக அதிகரித்துள்ளது. 

வைரசால் பாதிக்கப்பட் டவர்களில் 1 கோடியே 48 லட்சத்து 73 ஆயிரத்து 971 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா பாதிப்பில் இருந்து இது வரை 62 கோடியே 46 லட்சத்து 22,516 பேர் குணமடைந்து உள்ளனர். ஆனாலும், கரோனா வைரசால் உலகம் முழு வதும் இதுவரை 66 லட் சத்து 36 ஆயிரத்து 186 பேர் உயிரிழந்துள்ளனர்

No comments:

Post a Comment