சென்னை-திருத்தணி-ரேணிகுண்டா சாலையில் 6 வழி ரயில்வே மேம்பாலம் அமைச்சர் எ.வ.வேலு தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 8, 2022

சென்னை-திருத்தணி-ரேணிகுண்டா சாலையில் 6 வழி ரயில்வே மேம்பாலம் அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னை, நவ.8 சென்னை - திருத்தணி - ரேணி குண்டா சாலையில் அமைய உள்ள 6 வழி ரயில்வே மேம்பால பணிக்கு ரயில்வே துறையுடன் இணைந்து ஒப்பந்தம் கோரப்படும் என பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். சென்னை - திருத்தணி - ரேணிகுண்டா சாலையில் 7.5 மீட்டர் அகலம் உள்ள இருவழி ரயில்வே மேம்பாலத்திற்கு பதிலாக, 6 வழி ரயில்வே மேம்பாலம் கட்டப்படுகிறது. தற்போதைய மேம்பாலத்தின் அருகில், 6 வழி மேம்பாலம் கட்டுவதற்காக 1,150 சதுர மீட்டர் நில ஆர்ஜிதமும் தேவைப்படுகிறது.

அதற்கான ஒப்புதல் அளித்து ரூ.13.5 கோடி ஒதுக்கி 2020ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. மேலும் திட்ட அறிக்கை ரயில்வேயின் ஒப்புதலுக்கு அனுப்பப் பட்டது. தற்போது, இந்த பணி, ரயில்வே பணிகள் 

2022-2023 என்ற தலைப்பின் கீழ் இணைந்து ரயில்வே யின் ஒப்புதல்  பெற்றவுடன் பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து, சென்னை - திருத்தணி - ரேணிகுண்டா சாலையில் இருவழி ரயில்வே மேம்பாலத்திற்கு பதிலாக, 6 வழி ரயில்வே மேம்பாலமாக கட்டப்பட உள்ள பகுதியை பொதுப்பணிகள், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு  ஆய்வு செய்தார்.  

பின்னர் அவர் செய்தியாளரிடம் கூறியதாவது: அம்பத்தூர் தாலுகாவில் உள்ள இந்த ரயில்வே கடவு எண் 64, சென்னை - அரக்கோணம் சாலை சென்னை கோட்டத்திற்கு உட்பட்டது. விரிவான திட்ட அறிக்கையின் அடிப்படையில், தற்போதைய மேம்பாலத்தின் அருகில் ரூ.13.5 கோடி மதிப்பீட்டில், 6 வழி மேம்பாலம் கட்டுவதற்கு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ரயில்வே மேம்பாலம் பண ஒப்பளிப்பு அடிப்படையில், ரயில்வே  பணிகளின் கீழ், தமிழக அரசுடன் இணைந்து, தற்போதைய இருவழி மேம்பாலத்தை 6 வழியாக மேம்படுத்தப்பட வேண்டும். நில எடுப்பு மற்றும் வடிவமைப்பு முழுமைபெற்றவுடன் நிர்வாக ஒப்புதல் பெற்று, ரயில்வே துறையும் அணுகு சாலை நெடுஞ்சாலைத்துறையும் முறையாக ஒப்பந்தம் கோரப்பட்டு மேம்பாலம் பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


No comments:

Post a Comment