புதுடில்லி, நவ. 10 576 தாய்மொழிகள் குறித்து ஒன்றிய அரசு ஆய்வு நடத்தி உள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
6ஆ-வது அய்ந்தாண்டு திட் டத்தில் இருந்து வழக்கமான ஆராய்ச்சி நடவடிக்கையாக, மொழியியல் ஆய்வு மேற்கொள் ளப்பட்டு வருகிறது. இதன்படி, தாய்மொழி பேச்சு தரவுகள் காணொலியாக படம் பிடிக்கப் படுகிறது. ஒவ்வொரு தாய்மொழி யின் மூலச்சுவையை பாதுகாக் கவும், ஆய்வு செய்யவும் தேசிய தகவல் மய்யத்தில் இணைய காப்பகம் தொடங்க திட்ட மிடப்பட்டுள்ளது. தேசிய தகவல் மய்ய சர்வரில், இந்த காணொலி தரவுகள், பதிவேற்றம் செய்யப் படுகின்றன. இதுவரை 576 மொழிகள் மற்றும் வட்டார வழக்குகளை பற்றிய தாய்மொழி ஆய்வை நிறைவு செய்து விட்டதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, உத்தரப்பிரதேசத்தில் தாய்மொழி ஆய்வுக்கான களப் பணி நடந்து வருகிறது. ஜார் கண்ட் மாநிலத்தில் இறுதிக்கட்ட பணி நடந்து வருகிறது. இமா சலபிரதேசத்தில் இறுதிக்கட் டத்தை நெருங்கி வருகிறது. மேலும், 2021ஆ-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, கரோனா தாக்கம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்பணியை சுமுகமாக நடத்து வதற்காக, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மாவட்டங்கள், கிராமங்கள், நகரங்கள், வார்டுகள் ஆகியவற்றை துல்லியமாக பிரித்து காட்டும் வரைபடம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. மொத்தம் 6 லட்சம் வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
No comments:
Post a Comment