பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் துறைகள் - ரூ.51 கோடி செலவில் விடுதி, வகுப்பறை கட்டடங்கள் : முதலமைச்சர் திறந்து வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 3, 2022

பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் துறைகள் - ரூ.51 கோடி செலவில் விடுதி, வகுப்பறை கட்டடங்கள் : முதலமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை,நவ.3- பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத் துறைகள் சார்பில் ரூ.51.30 கோடி மதிப் பிலான விடுதி, வகுப்பறைக் கட்டடங் களைமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்துவைத்தார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பிற்படுத் தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் ரூ.13.64 கோடியில் மதுரை, தேனி மாவட்டங்களில் 3 உண்டு உறைவிடப் பள்ளிகள், மதுரையில் 2 பள்ளிகளில் வகுப்பறைகள், ஆய்வகங்கள், நாகை, தருமபுரி மாவட்டங்களில் 2 கல்லூரி விடுதிக் கட்டடங்கள் ஆகிய வற்றை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக திறந்துவைத்தார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில், சென்னை, மதுரை, திருவாரூர், தென்காசி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ரூ.9.92 கோடியில் ஆதிதிராவிட மாணவ, மாணவிகளுக்கான 6 விடுதிக் கட்ட டங்கள், திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறையில் ரூ.10.52 கோடியில்4 பள்ளிக் கட்டடங்கள், செங் கல்பட்டு, நீலகிரி, நாமக்கல் மாவட்டங் களில் ரூ.17.22 கோடியில்3 மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிக்கட்டடங்கள் என மொத்தம் ரூ.37.66 கோடியில் கட்டப் பட்டுள்ள கட்டடங்களையும் முதல மைச்சர் திறந்துவைத்தார்.

புதிய தாட்கோ அலுவலகங்கள்

இதுதவிர, புதிதாக தோற்றுவிக்கப் பட்ட செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப் பேட்டை, கள்ளக்குறிச்சி, தென் காசி, மயிலா டுதுறைஆகிய 6 மாவட்டங்களில், ஆதி திராவிடர், பழங்குடியினருக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் அமைக்கப்பட் டுள்ள தாட்கோஅலுவலகங்களையும் முதலமைச்சர் திறந்துவைத்தார்.

197 பேருக்கு பணி நியமன ஆணை

மேலும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறைக்காக, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முது கலைப் பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1,கணினி பயிற்றுநர் நிலை-1 ஆகியபணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 197 பேருக்கு பணி நியமனஆணைகளை வழங்கும் அடை யாளமாக 7 பேருக்கான ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார். 

பின்னர், ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு அய்.அய்.டி. மூலம் பி.எஸ்.டேட்டா சயின்ஸ் அண்டு அப்ளையன்சஸ், எச்சிஎல் நிறுவனம் மூலம் வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப் படிப்பு பயில பயிற்சித் தொகை, இந்தியன் 'ஹெல்த் கேர்' மூலம் மெடிக்கல் கோடிங் பயிற்சி, ஓட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட் மூலம் பி.எஸ்சி. ஹாஸ்பிடாலிட்டி அண்டு ஓட்டல் நிர்வாகம், உணவு உற்பத்தி பட்டயப் படிப்பு ஆகிய பயிற்சிகளுக்கு தேர்வாகியுள்ள 130 மாணவ, மாணவிகளுக்கு ஆணைகளை வழங்கும் அடையாளமாக 9 பேருக்கு ஆணை களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், ராஜகண் ணப்பன், செஞ்சி மஸ்தான், கயல்விழி செல்வராஜ், தலைமைச்செயலர் வெ. இறையன்பு, தாட்கோதலைவர் உ.மதி வாணன், ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறை செயலர் தென்காசி ஜவஹர், பிற்படுத் தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட் டோர், சிறு பான்மையினர் நலத் துறை செயலர் மங்கத் ராம் சர்மா, பிற்படுத்தப்பட் டோர் நல ஆணையர் அனில் மேஷ் ராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


No comments:

Post a Comment