புதுடில்லி,நவ.10- உச்சநீதிமன்றத்தின் 50 ஆவது தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திரசூட் பதவியேற்றுக் கொண்டார்.
உச்சநீதிமன்றத்தின் 49ஆவது தலைமை நீதிபதியாகப் பதவி வகித்த யு.யு.லலித் நேற்று முன்தினம் (8.11.2022) ஓய்வு பெற்றார். இதையடுத்து, அவ ருக்கு அடுத்தபடியாக மூத்த நீதிபதியாக உள்ள தனஞ்செய் யஷ்வந்த் (டி.ஒய்.) சந்திரசூட் 50ஆவது தலைமை நீதிபதி யாக நேற்று (9.11.2022) பதவியேற்றுக் கொண்டார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இந்நிகழ்ச்சியில், குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா, கிரண் ரிஜிஜு, ராஜ்நாத் சிங், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, தலைமை நீதிபதி பதவியிலிருந்து நேற்று முன்தினம் ஓய்வுபெற்ற யு.யு.லலித் பங்கேற்றனர்.
தொடர்ந்து, உச்சநீதிமன்ற வளாகத் தில் உள்ள காந்தியார் சிலைக்கு டி.ஒய். சந்திரசூட் மாலை அணிவித்தார். பின் னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது, ‘‘சாதாரண மக்களுக்கு நீதி வழங் குவதில் நான் முன்னுரிமை வழங்கு வேன். தொழில்நுட்பம், பதிவகம் (ரிஜிஸ்ட்ரி) மற்றும் நீதித் துறைச் சீர் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்” என் றார். தலைமை நீதிபதி பதவியி லிருந்து ஓய்வுபெற்ற யு.யு.லலித் 74 நாள்கள் மட் டுமே அப்பதவியில் இருந்தார். ஆனால், டி.ஒய்.சந்திரசூட் 2024 நவம்பர் 10ஆம் தேதி வரை (2 ஆண்டுகள்) இந்தப் பதவியில் இருப்பார்.
மேனாள் தலைமை நீதிபதியின் மகன் என்ற பெருமையும் இவருக்குக் கிடைத்துள்ளது. இவரது தந்தையான ஒய்.வி.சந்திரசூட் 16ஆவது தலைமை நீதிபதியாகப் (1978 - 1985) பொறுப்பு வகித்தார். நீண்டகாலம் (7 ஆண்டுகள்) தலைமை நீதிபதியாகப் பதவி வகித்தவர் என்ற பெருமையும் பெற்றவர்.
No comments:
Post a Comment