புதுடில்லி, நவ. 3- கருநாட காவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர், தனக்கு அர சியல் செல்வாக்கு இருப் பதாகக் கூறி பலரிடம் பண மோசடி செய்து வந்தார். இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட் டார்.
இவர் இப்போது டில்லி ஆளுநர் வி.கே.சக்சேனா வுக்கு எழுதிய கடிதத்தில்,
சிறையில் தனது பாது காப்பை உறுதி செய்வதற் காக டில்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு 10 கோடி ரூபாய் வரை கொடுத்ததாக சுகேஷ் குற்றம் சுமத்தியுள்ளார். மேலும், ஆம் ஆத்மி கட் சியில் தென்னக பிரிவில் முக்கிய பதவி பெறுவ தற்கும், மாநிலங்களவை சீட் பெறுவதற்காகவும் ஆம் ஆத்மிக்கு 50 கோடி ரூபாய்க்கு மேல் பணம் கொடுத்ததாக கூறியுள்ளது டில்லி அரசியலில் பரப ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment