சென்னை,நவ.30- சென்னையில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இதுவரை 4.09 லட்சம் கை அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன என்று தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில், இந்தியாவிலேயே முதன்முறையாக கை அறுவை சிகிச்சை உயர்சிறப்பு மேற்படிப்பை தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (29.11.2022) தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து கை அறுவை சிகிச்சை துறையில், கை துண்டிக் கப்பட்டவர்களுக்கு, வெற்றிகரமாக அறுவைசிகிச்சை செய்யப் பட்டு, குணமடைந்து வீடு திரும்ப இருந்தவர்களைச் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர், முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளைஅங்கி அணிவிக்கும் நிகழ்வில் பங்கேற்றார்.
அப்போது, செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிர மணியன் கூறியதாவது: இந்தியாவில் முதன்முறையாக ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கை அறுவை சிகிச்சை உயர் சிறப்பு மேற்படிப்பு தொடங்கப் பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே இப்படிப்பு இதுவரை இருந்தது. ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1971ஆம் ஆண்டு ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை துறைதொடங்கப்பட்டது. 1974ஆம் ஆண்டு கை அறுவை சிகிச்சைக்கென20 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. 2018ஆம் ஆண்டு இந்தியா விலேயே முதல் கை மாற்று அறுவைசிகிச்சை வெற்றிகரமாக இங்கு செய்யப்பட்டது. இந்த ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை துறைக்கென ரூ.4.7 கோடி செலவில் மூன்றாம் தளம் கட்டிடம் திறந்து வைக்கப்பட் டுள்ளது. மேலும், அறுவை சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் உயர்தர மருந்து களுக்கென ரூ.4.2 கோடியை தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது. தமிழ்நாட்டிலேயே அவசர கை அறுவை சிகிச்சை செய்யப் படும் ஒரே அரசு மருத்துவமனை இந்த மருத்துவமனையாகும். இங்கு இதுவரை 4,09,527 அறுவை சிகிச்சைகள் செய்யப் பட்டுள்ளன. இந்த மருத்துவமனையின் நுண்ணுயிரியியல் துறையில் கரோனா காலத்தில் 11 லட்சம் ஆர்டி-பிசிஆர்என்ற கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. என்று அமைச்சர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment