அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு 4 லட்சம் ரூபாய் மதிப்பில் கல்வி சீர் வழங்கிய பொதுமக்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 17, 2022

அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு 4 லட்சம் ரூபாய் மதிப்பில் கல்வி சீர் வழங்கிய பொதுமக்கள்

கந்தர்வகோட்டை, நவ. 17- புதுக்கோட்டை மாவட்டம் கந்தரவக்கோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டியில் ஊர் பொதுமக்களால் கல்வி சீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கூட்டுத் தலைமை யாக மருத்துவர் சுவாமிநாதன், வட்டாரக் கல்வி அலுவலர் வெங் கடேஸ்வரி,காவல் உதவி ஆய் வாளர் ரித்தின், ஊராட்சி மன்றத் தலைவர் கங்காதரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

கல்வி சீர் வழங்கும் விழாவினை வட்டார வளர்ச்சி அலுவலர் சிறீ தரன் தொடங்கி வைத்தார். மாவட்ட கவுன்சிலர் ஸ்டாலின், பேராசிரியர் அமுதா, மேனாள் தலைவர் வீராசாமி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராஜேந் திரன், பொருளாளர் அச்சுதன், ,பள்ளி மேலாண்மை குழுத்தலைவி இலக்கியா,அய்யனார் கேஸ் கம்பெனி நிறுவனர் விஜயராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   கந்தரவக்கோட்டை, அக்கச்சிப் பட்டி,இந்திரா நகர்,மண்டேலா நகர், ஆகிய பகுதி மாணவர்கள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள் ளியில் பயின்று வருகின்றனர்.

அப்பகுதியில் உள்ள மாணவர் களின் பெற்றோர்கள் ஊர்  பொது மக்கள் அனைவரும் சேர்ந்து 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான கல்வி சீர் பொருட்களான ஸ்மார்ட் டிவி, ஸ்மார்போர்ட், டேபிள்,சேர், இரும்பு புத்தக அலமாரி, பிளாஸ் டிக் சேர்கள், மின்விசிறிகள், மின் விளக்குகள், குடங்கள், தண்ணீர் ட்ரம், சுவர் கடிகாரம், எடை கருவி, விளையாட்டு பொருட்கள், அறிவியல் உபகரணங்கள், கேமரா, வாளி, தலைவர்களின் ஒளிப் படங்கள், பீரோ, ஒலிவாங்கி, ஒலி பெருக்கி தாம்பள தட்டு, அலுமினிய வாளி உள்ளிட்ட 70 மேற்பட்ட நன் கொடையாளர்களும், 200க்கு மேற்பட்ட பொருட்களை  கல்வி சீராக வழங்கினார்கள். முன்னதாக கல்வி சீர் பொருட்களை கந்தர் வகோட்டை வெள்ளை முனியன்  கோயிலில் இருந்து அக்கச்சிப்பட்டி வரை வாணவேடிக்கை முழங்க மேளதாளத்துடன்   வழங் கினார்கள். 

இந்நிகழ்வில் தலைமை ஆசிரி யர் தமிழ்செல்வி  வரவேற்புரை வழங்கினார். ஆங்கில பட்டதாரி ஆசிரியர் ஆனந்தராஜ் தொகுத்து வழங்கினார்.  வரவேற்பு பாடலு டன் வெள்ளைச்சாமி வரவேற்றார்.

மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள்  அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. கல்விச்சீர் வழங்கி வந்த பொதுமக்களை ஆசிரியர்கள் மணிமேகலை, ரகமத்துல்லா, ஆனந்த ராஜ்,  நிவின், செல்விஜாய், வெள்ளைச்சாமி ஆகியோர் வர வேற்றனர்.

இந்நிகழ்வில் பள்ளி மேலாண் மைக்குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம்,வார்டு உறுப்பினர்கள் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment