சென்னை,நவ.25- பன்னாட்டு மற்றும் தேசியப் போட்டிகளில் பதக்கம் வென்ற 190 விளையாட்டு வீரர் களுக்கு மொத்தம் ரூ.4.85 கோடி மதிப்பில் ஊக்கத் தொகையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். தேசிய மற்றும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று, இந்த ஆண்டு கொலம்பியாவில் நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகளப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற டி.செல்வபிரபு, கலப்பு தொடர் ஓட்டப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற பரத்தர், இந்தோனேசியாவின் ஜகார்தாவில் நடைபெற்ற ஆசியக் கோப்பை ஆக்கி போட்டியில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் எஸ்.மாஹீஸ்வரன், எஸ்.கார்த்திக் மற்றும் பல்வேறு போட்டிகளில் வென்ற 190 வீரர்கள், வீராங்கனைகளுக்கு மொத்தம் ரூ.4.85 கோடி மதிப்பில் ஊக்கத்தொகை வழங்கினார்.
முன்னதாக, இளைஞர் நலன்மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேசியதாவது: விளையாட்டுத் துறையில் இந்தியா விலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கவும், அகிலஇந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும் நடை பெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ் நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று வெற்றி பெற, அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளை யாட்டுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விளையாட்டு வீரர், வீராங்கனைகளை விரைவில் ஒன்றுதிரட்டி விழா நடத்தி, அவர்களை முதல்வர் உற்சாகப்படுத்த இருக்கிறார். இந்தி யாவில் தமிழ்நாடு விளையாட்டுகளின் தலைநகரமாக மாற்றிக் காட்டுவோம் என்ற உறுதியோடு முதல்வர் செயல்பட்டு வருகிறார்.
இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்து இன்றுவரை 1,433 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.40 கோடியே 90 லட்சம் மதிப்பில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
No comments:
Post a Comment