தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி வீணாக்கப்படவில்லை; கூடுதலாக 48 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 3, 2022

தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி வீணாக்கப்படவில்லை; கூடுதலாக 48 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

தகவல் பெறும் உரிமை சட்டக் கேள்விக்கு சுகாதாரத் துறை பதில்

சென்னை, நவ. 3- தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி வீணாக்கப் படவில்லை. ஒன்றிய அரசு கொடுத்ததைவிட கூடுதலாக 48 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப் பட்டுள்ளன என்று தகவல் அறி யும் உரிமை சட்டத்தில் சுகாதா ரத் துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தடுப்பூசிகள் செலுத் தும் பணி 2021ஆம் ஆண்டு ஜன.16ஆம் தேதி தொடங்கியது. 12 வயதுக்கு மேற்பட்ட அனை வருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது. சுகாதாரம், முன்களப் பணியாளர்கள் மற் றும் 2 தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் நிறைவடைந்த 60 வயதை கடந்தவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவச மாக பூஸ்டர் தடுப்பூசி போடப் படுகிறது. அதேநேரம், 18 முதல் 59 வயது வரையுள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தனியாரில் ரூ.386 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் உத்தரப்பிரதேசம் மாநிலம் முத லிடம் பிடித்துள்ளது. இதுவரை 39.02 கோடி டோஸ் தடுப்பூசியை செலுத்தியுள்ளது. 17.74 கோடி டோஸ்களுடன் மகாராஷ்டிரா 2ஆவது இடமும், 15.67 டோஸ் களுடன் பீகார் 3ஆவது இடமும், 15.57 டோஸ்களுடன் மேற்கு வங்கம் 4ஆவது இடமும், 13.35 டோஸ்களுடன் மத்தியப்பிர தேசம் 5ஆவது இடமும், 12.74 டோஸ்களுடன் குஜராத் 6ஆவது இடமும் பெற்றுள்ளன. 12.71 டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி தமிழ்நாடு 7ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் இதுவரை எவ்வளவு கரோனா தடுப்பூசிகள் வீணாகியுள்ளன என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்டது. அதற்கு தமிழ்நாடு பொது சுகா தாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்ககம் (டிபிஎச்) அளித்த பதில் வருமாறு:

ஒன்றிய அரசின் அறிவுரை மற்றும் வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டு ஜன.16 முதல்கரோனா தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த செப்.6ஆம் தேதி வரை மொத்தமாக 11 கோடியே 55 லட்சத்து 63,680 டோஸ் கரோனா தடுப்பூசிகள் ஒன்றிய அரசால் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டன. 

அரசு கரோனா தடுப்பூசி மய்யங்கள் மூலம் 12 கோடியே 3 லட்சத்து 68,834 டோஸ் கரோனா தடுப்பூசிகள் செலுத் தப்பட்டுள்ளன. அதன்படி 48 லட்சத்து 5,154 டோஸ் தடுப் பூசிகள் கூடுதலாக செலுத்தப் பட்டுள்ளன. எனவே, தடுப்பூசி சேதத்தின் அளவு மைனஸ் 4 சதவீதம் ஆகும்.

இவ்வாறு பதில் அளிக்கப் பட்டுள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “கரோனா தடுப்பூசிக் கான ஒரு குப்பியை திறந்தால் குறிப்பிட்ட மணி நேரத்துக்குள் 10 பேருக்கு தடுப்பு மருந்தை செலுத்த வேண்டும். குப்பியை திறக்கும்போதும், மருந்தை ஊசி யில் எடுக்கும்போதும் வீணா வதை கணக்கில் கொண்டு 11 பேருக்கு செலுத்துவதற்கான தடுப்பு மருந்து குப்பியில் இருக்கும்.

சரியான திட்டமிடல்:

ஆரம்பகட்டத்தில் தடுப்பூசி செலுத்த தொடங்கியபோது போதிய விழிப்புணர்வு இல்லாத தால் சில மாதங்கள் தடுப்பூசிகள் வீணாகின. அதன்பின், தடுப்பூசி வீணாவது தடுக்கப்பட்டது.

அதேநேரத்தில் குப்பியில் கூடுதலாக உள்ள தடுப்பு மருந் தையும்சரியாக திட்டமிட்டு பொதுமக்களுக்கு செலுத்தப் பட்டது. இதன்மூலம் ஒன்றிய அரசு வழங்கிய டோஸ்களைவிட கூடுதலான டோஸ் தடுப்பூசிகள் தமிழ்நாட்டில் செலுத்தப்பட்டு உள்ளன” என்றனர்.

No comments:

Post a Comment