வடகிழக்குப் பருவ மழை தொடங்கியும் தமிழ்நாட்டில் வறண்டு காணப்படும் 432 ஏரிகள்: நீர்வளத்துறை தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 8, 2022

வடகிழக்குப் பருவ மழை தொடங்கியும் தமிழ்நாட்டில் வறண்டு காணப்படும் 432 ஏரிகள்: நீர்வளத்துறை தகவல்

சென்னை, நவ.8 வடகிழக்கு பருவமழை தொடங்கி யும் வழக்கத்துக்கு மாறாக, அதிகளவில் மழை பெய்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 432 ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் தண்ணீர் இன்றி வறண்டு உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ஆம் தேதி தொடங் கியது. இந்த பருவமழை காலத்தில், வருடத்தின் மொத்த மழைப்பொழிவில் 48 சதவிகிதம் தமிழ்நாட்டுக்கு கிடைக் கிறது. மேலும், கடந்த ஆண்டை விட அதிக புயல்கள் உருவாகும் எனவும், இந்த ஆண்டு இயல்பை விட 38% முதல் 75% வரை கூடுதல் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. அதேபோல், சென்னை, மதுரை, கன்னியா குமரி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் நடப்பாண்டு வட கிழக்கு பருவமழையானது, சராசரியை விட அதிகரிக்கும். வடகிழக்கு பருவமழை  தொடர்ந்து மழை பெய்து வருவ தால், தமிழ்நாட்டில் உள்ள நீர்த்தேக்கங்கள் வேகமாக நிரம்பிவருகின்றன.

இந்நிலையில் தமிழ்நாட்டில் தொடர்மழை பெய்து வரும் நிலையில் 2,514 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி யுள்ளன. 2,077 ஏரிகளில் 75 விழுக்காடு கொள்ளளவிற்கு மேல் தண்ணீர் நிரம்பியுள்ளது. பாதி அளவில் 2,842 ஏரிகளில் நீர் இருப்பு உள்ளது. மிக குறைந்த அளவில் 2,968 ஏரிகளில் நீர் இருப்பு உள்ளது. இதில் 432 ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் வறண்டு காணப்படுகிறது. இதில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 148 ஏரிகள், தென்காசி மாவட்டத்தில் 103 ஏரிகள் நீரின்றி வறண்டு உள்ளன என நீர்வளத்துறை அதிகாரி தெரிவித்தார்.


No comments:

Post a Comment