ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஹிந்தித் திணிப்பை எதிர்த்து திராவிட மாணவர் கழகம் சார்பில் 4.11.2022 அன்று தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் விவரம் வருமாறு:
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பில், 4.11.2022 வெள்ளி மாலை 5 மணியளவில், விருதுநகர் பழைய பேருந்து நிலையம் எதிரில், அறிஞர் அண்ணா சிலை அருகில், ஹிந்தித் திணிப்பை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திராவிட மாணவர் கழகத் தோழர் சாத்தூர் அ.அன்புமணி மாறன் தலைமையில், மண்டல இளைஞரணிச் செயலாளர் இரா.அழகர் முன்னிலையில், மாவட்ட கழக செயலாளர் விடுதலை தி.ஆதவன் ஆர்ப்பாட்ட முழக்கங்கள் எழுப் பினார். மாநில ப.க. துணைத் தலைவர் கா.நல்லதம்பி ஆர்ப் பாட்ட நோக்கம் குறித்து தொடக்கவுரையாற்றினார். விருது நகர் சி.பி.அய். நகரச் செயலாளர் தோழர் முத்துகுமார், விடு தலை சிறுத்தைகள் இயக்கத் தோழர் செல்வம், கழக பொதுக் குழு உறுப்பினர் வானவில் வ.மணி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
மாவட்ட கழக துணைத் தலைவர் அ.தங்கசாமி, அமைப் பாளர் வெ.முரளி, பொதுக்குழு உறுப்பினர் வெ.புகழேந்தி, மாவட்ட ப.க. தலைவர் பெ.த.சண்முகசுந்தரம், சி.பி.அய். மாதர் சங்கப் பொறுப்பாளர்கள் மாரீஸ்வரி, மலர்க்கொடி, ஏ.அய்.டி.யூ.சி. தோழர் பாண்டியன், அருப்புக்கோட்டை சி.பி.அய். தோழர் அ.இளங்கோ, சிவகாசி நகர கழக. தலைவர் மா.முருகன், அமைப்பாளர் பெ.கண்ணன், திருத்தங்கல் நகர கழக அமைப்பாளர் மா.நல்லவன், திருவில்லிபுத்தூர் ஒன்றிய கழக தோழர் கு.போத்திராஜ், அருப்புக்கோட்டை ஒன்றிய கழக செயலாளர் இரா.முத்தையா, நகர கழக செயலாளர் பா.இராசேந்திரன், இளைஞரணிச் செயலாளர் க.திரு வள்ளுவர், மு.முனியசாமி, பொ.கணேசன், முத்துகுமார், விருதுநகர் ஒன்றிய கழக தோழர் ஆதிமூலம் மற்றும் கழகத் தோழர்கள், சி.பி.அய்., விடுதலை சிறுத்தைகள் அமைப்புத் தோழர்கள் பெருமளவில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்ட நிகழ்வை விளக்கி "இந்தித் திணிப்பை எதிர்ப்பது ஏன்?" துண்டறிக்கை நகரெங்கும் விநியோகிக்கப் பட்டது. நிறைவாக மாவட்ட கழக இளைஞரணி துணைச் செயலாளர் வானவில் ம.கதிரவன் நன்றி கூற ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது.
கோவை
கோவை மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பில் ஒன்றிய அரசின் ஹிந்தி திணிப்பை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்றது
திராவிட மாணவர் கழக மாநில துணைச்செயலாளர், மு.இராகுலன் அவர்கள் தலைமை தாங்கினார்.
கோவை மாவட்ட கழக தலைவர், ம.சந்திரசேகர், மேட்டுப்பாளையம் மாவட்ட தலைவர் சு.வேலுச்சாமி, கோவை மாவட்ட செயலாளர் தி.க.செந்தில்நாதன், பகுத்தறி வாளர் கழகம் மாநில துணைத் தலைவர், தரும. வீரமணி, மாவட்டத் துணைத் தலைவர் பொள்ளாச்சி சி.மாரிமுத்து , ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோவை மண்டல செயலாளர் ச.சிற்றரசு தொடக்கவுரை யாற்றினார்.
திராவிடர் கழக சொற்பொழிவாளர், மாநகர தலைவர். புலியகுளம் க வீரமணி, ஒன்றிய அரசின் ஹிந்தி - சமஸ்கிருத திணிப்புக்கு எதிராக கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் தி.க.காளிமுத்து, மாநகர அமைப்பாளர் மே.ப.ரங்கசாமி, மாவட்ட அமைப்பாளர் மு. தமிழ்செல்வம், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் கு.தேவிகா, மாநகர செயலாளர் இரா.பிரபு, தொழிலாளரணி மாவட்ட தலைவர் வெங்கிடு, மாவட்ட இளைஞரணி தலைவர் திராவிடமணி, மாவட்ட மாணவர் கழக துணை தலைவர் ர. வின்சென்ட், மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் அமைப்பாளர் அக்ரி நாகராஜ், மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் ஞா. தமிழ் செல்வன், மேட்டுப்பாளையம் கழக மாவட்ட இளைஞரணி தலைவர் மு.வீரமணி, பக தோழர் உத்திரிநாதன், இரா.சி.பிரபாகரன், கவிகிருட்ணன், பழ அன்பரசு, தோழர் குமரேசன், பெயின்டர் குமார், தோழர் நீலகிரி, பக ஆனந்தராஜ், கு.வெ. கி.செந்தில், போத்தனூர் வெங்கடேஷ், கோபாலகிருஷ்ணன், லூகாஸ் பீட்டர், மகளிரணி திலகவதி, கவிதா, மாணவர் கழக த.க.யாழினி, சுரேசன், அர்ஜுனன் ரமேஷ், முருகானந்தம், வே. தமிழ்முரசு, தோழர் அருண், ஆசிரியர் பழனியப்பன், தோழர் குரு, புலியகுளம் கிருஷ்ணமூர்த்தி, விஜயகுமார், பொள்ளாச்சி நகர கழக பொறுப்பாளர்கள் வீரமலை, நாகராஜ், விடுதலை சிறுத்தைகள் மண்டல செயலாளர் சுசி கலையரசன், விசிக ஒன்றிய பொறுப்பாளர் பொன்நடராஜன், விசிக தோழர் சக்திதாசன், பெரியார் புத்தக நிலையம் பொறுப்பாளர் அ.மு.ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
பழனி
ஹிந்தித் திணிப்பை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் பழனி குளத்து ரவுண்டானா பகுதியில், சட்டக்கல்லூரி மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் அ.தில் ரேஸ்பானு தலைமையில் "கவிச்சுடர்" கு.கிருஷ்ணா, "தமிழமுது" வெங்கடேஷ், க.குணாநிதி, கோபால், ரெணகாளிமுத்து, பால் ஜாக்ஸன், கவுதமன் உள்ளிட்ட கல்லூரி மாணவத் தோழர்கள் முன்னிலையில் நடைபெற்ற பழனி கழக மாவட்டத் தலைவர் மா.முருகன், மாவட்டச் செயலாளர் பொன்.அருண் குமார், மாவட்ட ப.க தலைவர் ச.திராவிடச்செல்வன், புலவர்.வீர.கலாநிதி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இந்நிகழ்வில் வெற்றிவேந்தன், ம.தி.மு.க வைகோசெல்வம், நாகராஜன், ராஜேந்திரன், வி.சி.க சட்டமன்ற தொகுதி செயலாளர் போர்கொடியேந்தி, சிடிசி மணி, பாண்டிவளவன், வள்ளிதயாளன், தமிழ்செல்வன், ஆதித்தமிழர் கட்சியைச் சேர்ந்த பழனிமணி, ராஜா, கைசர், ரபீக்,ஜின்னா, மற்றும் பிச்சைமுத்து,அசுரன், சந்திரன், உள்ளிட்டோர் உரையாற்றினர்.
தொடர்ந்து மதனபூபதி, ஓவியர் பத்மநாபன், கணேசன், ச.பாலசுப்பிரமணி, மு.ரகுமான், குண.அறிவழகன், உள்ளிட்ட கழகத் தோழர்கள் நிகழ்வை ஒருங்கிணைத்தனர். இந் நிகழ்வில் ஆர்ப்பாட்ட முழக்கங்கள் அடங்கிய பதாகைகளை அனைவரும் கையிலேந்தியபடி மாநில சட்டக்கல்லூரி மாணவர் கழக பொறுப்பாளர் தில்ரேஸ்பானு ஆர்ப்பாட்ட முழக்கங்கள் எழுப்ப அனைத்து தோழர்களும் முழக்கங்களை திரும்ப எழுப்பினர்.
இதைக் கண்ட பள்ளி மாணவர்கள் 5 பேர் தாங்களாகவே ஆர்ப்பாட்டத்தில் தன்னெழுச்சியுடன் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மொத்தம் 65 பேர் கலந்து கொண்டனர். இறுதியாக கழக நகரத் தலைவர் சி.இராதாகிருட்டிணன் நன்றி கூறினார்.
ஈரோடு
ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் மாவட்ட திராவிடர் மாணவர் கழக தலைவர் பி.மணிமாறன் தலைமையில் மாநில அமைப்புச் செயலாளர். ஈரோடு. த.சண்முகம் தொடக்கவுரை யுடன் ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பேராசிரியர் ப.காளிமுத்து கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் கு.சிற்றரசு, மாவட்டச் செயலாளர் மா.மணிமாறன், பொதுக்குழு உறுப்பினர் கோ.பாலகிருஷ்ணன், மருத்துவர் தமிழ்க்கொடி, மாநகர செயலாளர் வீ.தேவராஜ், குருவரெட்டியூர் நகர செயலாளர் ந.கிருஷ்ணமூர்த்தி, ப.சத்தியமூர்த்தி, ஜெயராணி சத்திய மூர்த்தி, கோ.திருநாவுக்கரசு, சா.ஜெபராஜ் செல்லத்துரை, குருவை நகர இளைஞரணி தலைவர் ரா.ஜெகதீசன்,
க.பார்த்திபன், அ.பென்ஜான்சன், கவுதம், ஈரோடு பெரியார் புத்தகக் கடை சீனு.மதிவாணன், கு.ரவிக்குமார், சீ.சஞ்சய், ப.க. தலைவர் அனிச்சம் கனிமொழி, சத்திரம் ஆறுமுகம், திராவிட இயக்க தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர். அ.தமிழ்க் குமரன், திராவிடர் பேரவை.பொதுச் செயலாளர் ம.பாபு, ஈரோடு நீரோடை அமைப்பு நிலவன், மாவீரர் பொல்லான் பேரவை நிறுவனத் தலைவர் வடிவேல் ராமன், செயலாளர் சண்முகம், தலித் விடுதலை கட்சி மாநில அமைப்பாளர்.வெ.ஆறுமுகம், தலித் விடுதலை இயக்கம் சார்பில் மாவட்ட தலைவர்.பொன்.சுந்தரம், ஆர்.நடராஜன், மகளிரணி மல்லிகா, நிஷா, முனியம்மா, அனைத்துலக மக்கள் நல உரிமைக் கழக நிறுவனத் தலைவர் கே.ராஜேந்திரபிரபு மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஹிந்தி திணிப்பிற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஹிந்தி எதிர்ப்பு முழக்கமிட்டனர்.
குமரி
குமரி மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பாக ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரி யில் பெரியார் சிலை முன்பு நடந்தது. மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.இராஜேஸ் தலைமை தாங்கினார். மாவட்ட கழக தலைவர் மா.மு.சுப்பிரமணியம், மாவட்ட கழக செயலா ளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்து உரையாற்றினர்.
திமுக மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் ஆர்.சதா சிவன், துணை அமைப்பாளர் சங்கர், இந்திய தேசிய காங்கிரஸ் வாக்குசாவடி பிரிவு மாநில தலைவர் ஆர்.ராதாகிருஷ்ணன், எஸ்.சி. பிரிவு மாவட்ட தலைவர் ஜோயல், அகில இந்திய முற்போக்கு பேரவை மாநில துணைத்தலைவர் சி.சுந்தரம், திராவிட நட்புக்கழக மாவட்ட பொறுப்பாளர் விஷ்ணு, தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட பொறுப்பாளர் சுரேஷ், சுதர்சன், மதிமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெரால்டு, திராவிடத் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் அன்பழகன், மாவட்ட கழக அமைப்பாளர் ஞா.பிரான்சிஸ், கழக மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், கழக இலக்கிய அணி செயலாளர் பா. பொன்னுராசன், தொழிலாளரணி மாவட்ட அமைப்பாளர் ச.ச. கருணாநிதி, திராவிட மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் இரா.கோகுல், கழக தோழர் முத்து வைரவன், பெனடிக் மற்றும் தோழர்கள் தோழமை இயக்கத்தினர். பெருந்திரளாக பங்கேற்றனர்.
மன்னார்குடி
மன்னார்குடி மாவட்ட திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் ஒன்றிய அரசின் ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் 4. 11.2022 வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணி அளவில் நீடாமங்கலம் பெரியார் சிலை அருகில் நடை பெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர் கழக ஒன்றியச்செயலாளர் இள.புகழேந்தி தலைமை வகித்தார், திராவிடர் கழகத்தி னுடைய மாவட்ட ச் செயலாளர் கோ.கணேசன் வரவேற்புரை ஆற்றினார், மாவட்ட கழகத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த் தன் தொடக்க உரையாற்றினார்.
திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன், பகுத்தறிவு ஆசிரியரணி மண்டல அமைப்பாளர் சி.இரமேஷ், பகுத்தறிவு ஆசிரியரணி மாவட்டத் தலைவர் தங்க.வீரமணி, ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் பகுத்தறிவாளர் கழகத்தினுடைய மாவட்டத்தலைவர் வை.கவுதமன், பகுத்தறிவாளர் கழக மாவட்டச்செயலாளர் நா.உ.கல்யாணசுந்தரம், மன்னார்குடி ஒன்றியச்செயலாளர் மு.தமிழ்செல்வன், நீடாமங்கலம் ஒன்றிய கழக தலைவர் மா.பொன்னுசாமி நீடாமங்கலம் ஒன்றிய கழக செயலாளர் இரா.சக்திவேல் மன்னார்குடி மாவட்டத்தி.க துணைச் செயலாளர் வீ. புட்பநாதன், பகுத்தறி வாளர் கழக மன்னை நகரத் தலைவர் கோவி.அழகிரி, மாவட்ட இளைஞரணித் தலைவர் கா.இராஜேஷ்கண்ணன், செயலாளர் கா.இளங்கோவன், பகுத்தறிவு ஆசிரியர் அணி மாவட்ட அமைப்பாளர் நா.இரவிச்சந்திரன், பகுத்தறிவு ஆசிரியரணி நீடாமங்கலம் ஒன்றிய அமைப்பாளர் க.முரளி, கோட்டூர் ஒன்றிய கழகச்செயலாளர் எம்.பி.குமார், மன்னை நகர இளைஞரணி தலைவர் மா.மணிகண்டன், விக்கிரவாண்டி மாணவர் கழகத் தோழர்கள் சா.சந்தோஷ், ச.ஆகாஷ், கு.விஜய், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர்
சா.அய்யப்பன் பகுத்தறிவாளர் கழக நீடா. நகரச்செயலாளர் வா.சரவணன், இராயபுரம் மாணவர் கழகத் தோழர் ச.குடியரசு, ஒரத்தூர் சுப்பிரமணியன், பூவனூர் ச.அனந்தராமன், பெரிய கோட்டை மாணவர் கழகத் தோழர்கள் கோ.வீ.தமிழ்த்தென்றல் சே.சுருளி, க.ஜீவானந்தம், பா.வீரையன், மதி.செந்தமிழன் நீடாமங்கலம் மாணவரணி தோழர். நா.உ.க.இறையன்பு, ஆர்.பிரசாத், மற்றும் மாணவரணித்தோழர்கள். ஒளிமதி க.கவுசிக்ராஜா, பெரிய கோட்டை நா.சிவராஜ். சோத்திரை . ச.சாருக்கான், ஆதனூர்.பா.பாலகிருஷ்ணன், சே.கபிலன் நகர் தா.கவுதமன், மு.செந்தமிழன், பா.அஜய் ஆதனூர்.ஜே.வடிவழகன், கிருஷ்ணாபுரம்.மா.விஷ்ணு, நகர் .சுதாகர், மு.விஷ்வா மா.செந்தமிழன். ஆ. ஆகாஷ் கோவில் வெண்ணி.சோ.ஆர்யா, பூவானத்தம் சு. ரித்திக்ரோஷன், கோயில் வெண்ணி தி.தீபக், மு.கதிர், க.விஸ்வா, சோத்திரை க. கதிர்வேல். மா.விஷ்ணு , கோவில் வெண்ணி, ம.கிருபா கரன், ம.தீபக், ஜெ.சந்தோஷ் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஹிந்தி எதிர்ப்பு முழக்கங்களை எழுப் பினார்கள்.
No comments:
Post a Comment