முதலமைச்சர் அவர்களுக்கு சென்னை பத்திரிகையாளர் யூனியன் (MUJ) நன்றி!
சென்னை, நவ.4 பத்திரிகைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இதற்கு அடையாளமாக சென்னை தலைமைச் செயலகத்தில் 31.10.2022 அன்று ஓய்வுபெற்ற 7 பத்திரிகையாளர்களுக்கு அவர் ஆணை களை வழங்கினார். இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் கடந்த 25 ஆண்டுகளில், ஒரே நேரத்தில் அதிகப் படியானோருக்கு வழங்கப்படுவது இது தான் முதல் முறையாகும். இதற்காக சென்னை பத்திரிகையாளர் யூனியன் (MUJ) சார்பாக முதலமைச்சர் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்
பத்திரிகையாளர் ஓய்வூதியத் திட்டத்தில் வரையறுக்கப் பட்டுள்ள பணிக்கொடை மற்றும் பணிக்கால ஆண்டு, வருமான உச்சவரம்பு ஏற்கெனவே அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பத்திரிகையாளர்களின் ஓய்வூதிய விண்ணப் பங்களைப் பரிசீலிக்கும் முறையை எளிமைப்படுத்த வேண்டும். பத்திரிகையாளர்கள் ஓய்வூதியம் பெறுவதில் உள்ள முட்டுக்கட்டைகள் அகற்றப்படுவதுடன், ஓய்வுக் காலத்தில் பத்திரிகையாளர்களின் கண்ணியமான வாழ்வை உறுதிப்படுத்த முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். ஓய்வூ தியம் கோரி விண்ணப்பித்துள்ள பலருடைய விண்ணப் பங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அவற்றையும் தமிழ்நாடு அரசு பரிசீ லித்து தீர்வு காண வேண்டும் என சென்னை பத்திரிகை யாளர் யூனியன் கேட்டுக்கொள்கிறது என எல்.ஆர்.சங்கர் (தலைவர்), மணிமாறன் (பொதுச் செயலாளர்) சென்னை பத்திரிகையாளர் யூனியன் (MUJ). தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment