நவம்பர் 4 ஆம் தேதி ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் - டிச.2 தமிழர் தலைவர் ஆசிரியரின் பிறந்த நாளை சிறப்பாக நடத்திட முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 1, 2022

நவம்பர் 4 ஆம் தேதி ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் - டிச.2 தமிழர் தலைவர் ஆசிரியரின் பிறந்த நாளை சிறப்பாக நடத்திட முடிவு

தாராபுரம் மாவட்ட கழக கலந்துரையாடல் முடிவு

தாராபுரம், நவ.1 25.10.2022 அன்று காலை 11 மணிக்கு தாராபுரம் கொங்கு பவன் ஹாலில் தாரா புரம் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் பொதுச்செயலாளர் தஞ்சை இரா. ஜெயக் குமார் தலைமையில் அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம், மாவட்டத் தலைவர் க.கிருஷ் ணன், கோவை மண்டல இளைஞர் அணி செய லாளர் ஆ.முனீஸ்வரன் ஆகியோர் முன்னிலை யில் நடைபெற்றது. பொதுக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் நா. சக்திவேல் வரவேற்புரை யாற்றினார்.

மாவட்ட அமைப்பாளர் கி.மயில்சாமி, மாவட் டத் துணைத் தலைவர் முத்து முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் நா.மாயவன், மடத்துகுளம் ஒன்றிய செயலாளர் மா. தங்கவேல், தாராபுரம் ஒன்றிய அமைப்பாளர் கே.என். புள்ளியான், தாரா புரம் நகர பக செயலாளர் மு.மோகன், மீனாட்சி புரம் பகுதி அமைப்பாளர் கழக சித்திக்,பக தோழர் கள் பு.முருகேசு, மு.மாரிமுத்து, வடதாரை கழகத் தோழர்  இரா.வீராசாமி, கணியூர் தி.தொ. ச. மா.சிவக் குமார், அழகப்பன் ஆகியோர்  கலந்துகொண்டனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

தீர்மானம் 1:

8.10.2022 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் திராவிடர் கழக தலைமைச் செயற்குழு கூட்ட தீர்மானங்களை ஏற்ற செயல் படுத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 2:

தந்தை பெரியார் பிறந்த மண்ணில் மத வெறியை தூண்டி தமிழ்நாட்டை அமளிக்காடாக துடிக்கும் ஆர்.எஸ்.எஸ். திட்டத்தை முறியடிக்கும் வகையில் மாவட்டத்தின் அனைத்துப் பகுதியிலும் தமிழர் தலைவர் அவர்கள் எழுதிய “ஆர்.எஸ்.எஸ். எனும் டிரோஜன் குதிரை” நூல் விளக்க தெருமுனைக் கூட்டங்களை நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 3:

தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 90-ஆம் ஆண்டு (டிசம்பர் 2) பிறந்த நாள் விழாவை சுயமரியாதை நாள் விழாவாக எழுச்சியுடன் கொண்டாடுவது எனவும், பிறந்த நாள் விழாவினை விளக்கி சுவர் எழுத்து விளம் பரங்களை செய்வது எனவும் முடிவு செய்யப் படுகிறது. டிசம்பர் 2 அன்று காலை சென்னை பெரியார் திடலில் கழகத் தோழர்களை கழகத் தலைவர் சந்திக்கும் நிகழ்ச்சியிலும், அன்று மாலை சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மற்றும் அனைத்துக் கட்சி தலைவர்கள் பங்கேற்கும் ஆசிரியர் அவர்களின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவிலும் அனைவரும் பங்கேற்று சிறப்பிப்பது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 4:

திராவிட மாணவர் கழக சார்பில் நவம்பர் 4 ஆம் தேதி ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தை தாரா புரத்தில் மிக எழுச்சியுடன் நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது

தீர்மானம் 5:

தாராபுரத்தில் 2022 டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு தேதி வழங்கிடுமாறு இக் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 6:

பகுத்தறிவு ஆசிரியரணி தாராபுரம், முருகேஷ் - மாவட்ட தலைவர் உடுமலை வே.கலையரசன் - மாவட்ட செயலாளர் கணியூர் க. வேலுமணி- மாவட்ட அமைப்பாளர் ஆகியோரை பொறுப் பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

அலங்கியம் தோழர்கள் ஆ.சேகர், பெ.செல்வ ராஜ், ம.இளையராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்,

No comments:

Post a Comment