இலங்கை சிறையிலிருந்த தமிழ்நாடு மீனவர்கள் 3 பேர் விடுவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 3, 2022

இலங்கை சிறையிலிருந்த தமிழ்நாடு மீனவர்கள் 3 பேர் விடுவிப்பு

கொழும்பு, நவ.3- தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் நிகழ்வு அடிக்கடி நடந்த வண்ணம் உள்ளது. 

இந்த நிலையில் கடந்த 20ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப் பட்டினத்தை சேர்ந்த 3 மீனவர்களை எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்ற நீதிபதி தமிழ்நாடு மீனவர்கள் 3 பேரையும் நிபந்தனையுடன்  விடுதலை செய்து உத்தர விட்டார்.  

மேலும் 10 ஆண்டுகள் இலங்கை கடல் எல்லைக்குள் நுழையக் கூடாது என நீதிமன்றம் நிபந்தனை விதித் துள்ளது. ஊர்காவல்துறை நீதிமன்ற உத்தரவின்பேரில் யாழ்ப்பாணம் சிறையில் இருந்த 3 மீனவர்களும் விடுவிக் கப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட 3 மீனவர்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.  

No comments:

Post a Comment