ஈரோடு மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறியாளரணி மாநில துணைச்செயலாளர் ஈரோடு எஸ்.எம்.சாதிக் விடுதலை 3 ஆண்டு சந்தா ரூ6,000த்தை பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன் கழக அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம், மாவட்டத் தலைவர் கு.சிற்றரசு, மாவட்ட செயலாளர் மா.மணிமாறன்,மாவட்ட தொழிலாளரணி செயலாளர் தே.காமராஜ் (25-11-2022) எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் எழுதிய ‘தந்தை பெரியார் பிறவாமல் இருந்தால்...’ என்னும் நூலினை அனைவருக்கும் வழங்கி மகிழ்ந்தார்
காரைக்குடி கழக மாவட்டம், தேவகோட்டை என்.எஸ்.எம். வி.பி.எஸ் மேனிலைப் பள்ளியில் பெரியார் 1000 வினா-விடை போட்டியில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவர் கொ.மணிவண்ணன், தேவகோட்டை நகர தலைவர் முருகப்பன், பகுத்தறிவாளர் கழக தோழர் சிவ.தில்லைராஜா, பள்ளி ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் தியாகராஜன், முனைவர் பட்ட ஆய்வு மாணவர் பாஸ்கரன் ஆகியோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment