சென்னை,நவ.3- திமுகவை கண்டித்து பாஜக மகளிர் அணியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 364 பேர் மீது காவல்துறையினர் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர்.
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், தமிழ்நாடு பாஜக துணை தலைவர் வி.பி.துரைசாமி உட்பட 364 பேர் மீது, சட்டவிரோதமாக கூடுதல், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின்கீழ் நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர்.
No comments:
Post a Comment