சென்னை, நவ.4 தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அறிக்கை: மாணவர்களுக்கு உயர்கல்வித்துறை சார்ந்த படிப்புகள் மற்றும் வாய்ப்புகள் குறித்த தகவல்களை வலுத்தப்படுத்த அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கு 4 மற்றும் 5ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களுக்கு உண்டு உறைவிட பயிற்சியாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வழங்குகிறது.
இப்பயிற்சி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். இப்பயிற்சியில் அரசு உயர் கல்வித்துறையை சார்ந்த வல்லுநர்களை கொண்டு ஒவ்வொரு துறை சார்ந்த படிப்புகளைப் பற்றியும், அதற்கான விண்ணப்பிப்பதில் உள்ள வழிமுறைகள் மற்றும் நுணுக்கங்கள் குறித்தும், அரசுக் கல்லூரிகளில் உள்ள மாணவர் சேர்க்கை ஒதுக்கீடு பற்றியும், நுழைவுத் தேர்வுகள் மற்றும் இடஒதுக்கீட்டில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் வழங்கப்படவுள்ளன.
சென்னை, கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நினைவு நூற்றாண்டு நூலக வளாகத்தில் பயிற்சி நடைபெறுகிறது.
No comments:
Post a Comment