காவல்துறை வேலைக்கு தமிழ்நாடு முழுவதும் 2.99 லட்சம் பேர் தேர்வு எழுதினர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 28, 2022

காவல்துறை வேலைக்கு தமிழ்நாடு முழுவதும் 2.99 லட்சம் பேர் தேர்வு எழுதினர்

சென்னை, நவ. 28 தமிழ்நாடு முழுவதும் காவல்துறை வேலைக்கான எழுத்துத் தேர்வை 2.99 லட்சம் பேர் எழுதினார்கள். 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகளும் இந்த தேர்வில் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு காவல் துறையில் 3,552 இரண்டாம் நிலை காவலர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர். சிறைத்துறையில் 161 வார்டர்களும், தீயணைப்பு துறையில் 120 தீயணைப்பு வீரர்களும் இதுபோல புதிதாக தேர்வாக உள்ளனர். இதற்காக 3 லட்சத்து, 66 ஆயிரத்து, 727 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் ஆண்கள் 2 லட்சத்து 99 ஆயிரத்து 857 பேரும், பெண்கள் 66 ஆயி ரத்து 811 பேரும் உள்ளனர். சென்னையில் 16 ஆயிரத்து 178 பேர் விண்ணப்ப மனுக்களை கொடுத்திருந்தனர். இவர்களில் ஆண்கள் 13 ஆயிரத்து 287 பேரும், பெண்கள் 2,882 பேரும் அடங்குவார்கள். சென்னையில் திருநங் கைகள் 9 பேர் விண்ணப்ப மனுக்கள் கொடுத்திருந்தனர். தமிழ்நாடு முழுவதும், 59 திருநங்கைகள் விண்ணப்பம் செய்திருந்தனர். இவர்களுக்கு முதல் கட்டமாக  தமிழ்நாடு முழுவதும் 295 இடங்களில் எழுத்துத் தேர்வு நடந்தது. சென்னையில் 16 மய்யங்களில் தேர்வு நடைபெற்றது.

 நடந்த எழுத்துத் தேர்வில் 2 லட்சத்து 99 ஆயிரத்து 820 ஆண், பெண் விண்ணப்பதாரர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். திருநங்கைகளும் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள். 81.76 சதவீதம் பேர் தேர்வை எழுதியதாக தெரியவந்துள்ளது.  


No comments:

Post a Comment